சாதி ஒழிப்பில் முன்னுதாரணமாக திகழும்.. கிராமத்திற்கு ரூ10 லட்சம் பரிசு..முதல்வரின் சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ 10 லட்சம் சிறப்புத் தொகை பரிசாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு முதல் முறையாகக் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரம் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் துறை ரீதியில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்


வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபை விதி எண் 110ன் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் மாநில அளவில் 'ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்' அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இந்த 'ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்' தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

முதல்வர் பேச்சு

முதல்வர் பேச்சு

சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திமுக அரசு என்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பாடுபடும் அரசாக இருக்கிறது. சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை அன்பால் அரவணைப்போம். ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தன்னாட்சி அதிகாரத்துடன் அமைக்கப்படும் நல ஆணையத்திற்குத் தேவையான தனிச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

வன்கொடுமை வழக்குகளுக்குக் கூடுதல் நீதிமன்றங்கள்

வன்கொடுமை வழக்குகளுக்குக் கூடுதல் நீதிமன்றங்கள்

அதேபோல மாநிலம் முழுவதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கூடுதலாக நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இந்த கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைவாக விசாரிக்க முடியும்.

10 லட்சம் பரிசு

10 லட்சம் பரிசு

அதேபோல சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் சிறப்புத் தொகை பரிசாக அளிக்கப்படும். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில், பள்ளிக் கல்வித்துறை எந்த விதத்திலும் தலையிடாது. மேலும், மாநிலத்தில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும்" என்று தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, தமிழக கிராமங்களில் சாதிப் பாகுபாடு அதிகரித்து வருவதாகப் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், சாதி ஒழிப்பில் முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்குப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதை சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்

சிஏஏ எதிராகத் தீர்மானம்

சிஏஏ எதிராகத் தீர்மானம்

முன்னதாக இந்த அறிவிப்புகளை வெளியிடும் முன்னர். முதல்வர் ஸ்டாலின் சிஏஏ சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல சட்டசபையில் தங்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் கூறி, இந்த தீர்மானம் முன்மொழியும் முன்னர் அதிமுகவினரும் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து சட்டசபையிலிருந்த பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+