வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை அகற்றம்.. அமைதி திரும்ப நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை அகற்றப்பட்டுள்ளது, அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரியும் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை இடிக்கவும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் வேங்கைவயலில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் 11 பேர் கொண்ட குழுவினர் விசாரித்து வந்தனர்.
எனினும் இந்தச் சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு கடந்த ஜனவரி 14 ஆம் தேதி தமிழக அரசால் மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 35 பேரை உள்ளடக்கிய 10 தனிப்படையினர் வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பகுதிக்கு ரூ 9 லட்சம் செலவில் புதிய குடிநீர் தொட்டியை கட்டிக் கொடுக்க புதுக்கோட்டை எம்பி எம்.எம்.அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பன்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் தீண்டாமை கொடுமைகள் இன்னும் அரங்கேறி வருகிறது. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமூகநீதி என்பது இன்னமும் தொலைதூர கனவாகவே உள்ளது. பட்டியலின மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் புதுக்கோட்டை சிபிசிஐடி போலீசார் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர விசாரணை ஏதும் நடத்தவில்லை. வெறும் கண்துடைப்புக்காக ஒரு சிலர் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர். உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தும் எண்ணம் ஏதும் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்து 90 நாட்கள் கடந்த நிலையிலும், வழக்கு தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. முறையாக விசாரிக்கப்படவும் இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், சிபிசிஐடி புலன் விசாரணை அதிகாரியின் அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், வழக்கின் புலன் விசாரணை நியாயமாக நடந்து வருகிறது. உயரதிகாரிகள் விசாரணையை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு நபர் ஆணையத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் வேங்கைவயல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை அகற்றப்பட்டுவிட்டது. அங்கு அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்திற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications