தொண்டையில் வலி இருந்தாலும் மக்கள் தொண்டில் தொய்வு கூடாது.. ரைமிங்காக பேசிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தொண்டையில் வலி இருந்தாலும் மக்கள் தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆட்சிக்கு வந்ததும் நிதி நிலைமை சரியில்லை என்பதால் அந்த திட்டம் வழங்கப்படாமல் இருந்தது.

இது ஏமாற்று வேலை என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன் வைத்தன. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என பெயரிடப்பட்டது. இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கி வைத்தது.
இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கும் விழா ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடந்தது. இந்த திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் ரூ 1000 உரிமைத் தொகை வரவு வைக்கப்படுகிறது.
அந்த பணத்தை பெண்கள் தங்கள் குடும்ப செலவுக்காகவும் குழந்தைகளுக்கு படிப்பு செலவிற்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் விண்ணப்பித்தும் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர். அது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டனர். பழையவர்களுடன் சேர்த்து மொத்தம் 1.13 லட்சம் பேருக்கு இந்த மாதம் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்த உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது: தொண்டை வலி இருந்தாலும் மக்கள் தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது. உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை. மருத்துவர் ஓய்வெடுக்க சொல்லியிருந்தாலும் மக்களை சந்திக்கவே விரும்புகிறேன். தேர்தல் வாக்குறுதிபடி ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை செயல்படுத்தப்படுகிறது.
கலைஞர் உரிமை தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடி திட்டமாக உள்ளது. எந்த வித புகாரும் இல்லாமல் ரூ 1000 உரிமைத் தொகை செயல்படுத்தப்பட்டு வருகிறது. 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள அனைவருக்கும் இன்று மாலைக்குள் ரூ 1000 வரவு வைக்கப்படும். ரூ 1000 உரிமைத்தொகையை கொடுக்கவே முடியாது என்றார்கள். ஆனால் இன்று நாங்கள் எந்த புகாரும் இன்றி கொடுத்து வருகிறோம் என முதல்வர் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications