தொகுதி மறுசீரமைப்பு- பிரதமர் மோடியை ஏப்.6-ல் சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை வரும் 6-ந் தேதி சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவுக்காக தமிழ்நாட்டுக்கு வரும் 6-ந் தேதி பிரதமர் மோடி வருகை தரும் போது, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களுடனான மனுவை அனைத்துக் கட்சி எம்பிக்களுடன் இணைந்து வழங்குவதற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.













Click it and Unblock the Notifications