கோவை முக்கியம்.. சென்னையின் "மாஸ்டர்மைன்ட்களை" அவசரமாக அனுப்பிய ஸ்டாலின்.. 3 முக்கிய டாஸ்க்!
சென்னை: சென்னையில் கொரோனா கேஸ்கள் குறைந்துள்ள நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த உதவிய முக்கிய அதிகாரிகளின் குழுவை கோவைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் குறைய தொடங்கி உள்ளது. சென்னையில் தினசரி பாதிக்கு தினமும் 4000க்கும் குறைவாக பதிவாகி வருகிறது. மற்ற உள் மாவட்டங்களிலும் பெரிய அளவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனா கோவையில் மட்டும் தொடர்ந்து கேஸ்கள் உயர்ந்து வருகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கேஸ்கள் குறைந்தாலும் கோவையில் தொடர்ந்து 2000ல் தொடங்கி தற்போது தினசரி கேஸ்கள் 4 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.

தினசரி கேஸ்கள்
சென்னையில் நேற்று 3561 கேஸ்கள் மட்டுமே பதிவான நிலையில் கோவையில் 4268 கேஸ்கள் பதிவானது. கோவையில் நேற்று மட்டும் 31 பேர் பலியானார்கள். கோவையில் 35707 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். சென்னையில் தற்போது 45738 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். ஆக்டிவ் நோயாளிகள் கணக்கிலும் விரைவில் சென்னையை கோவை முந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நகரம்
தொழில்நகரமான கோவையில் தற்போது கேஸ்கள் அதிகரிப்பது, தமிழகத்தின் பொருளாதாரத்திற்கும் நல்லது கிடையாது. அதேபோல் கோவை இன்னொரு எபிசென்டராக மாறி வருவது, மூன்றாம் அலையை இந்த வருட இறுதியில் ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும். இதனால் உடனடியாக இந்த கொரோனா பரவலை தடுப்பது மட்டுமே தமிழகத்தில் கொரோனா சங்கிலியை உடைக்க உதவும்.

உதவி
இந்த நிலையில்தான் கோவையில் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தனி டீமை தமிழக அரசு அனுப்பி உள்ளது. கோவையில் திமுக எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பை செந்தில் பாலாஜி உள்ளிட்ட அண்டை மாவட்ட அமைச்சர்களுக்கு ஸ்டாலின் வழங்கி உள்ளார். 2 அமைச்சர்கள் இந்த கொரோனா தடுப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

கூடுதல் பொறுப்பு
இந்த நிலையில்தான் தற்போது சென்னையில் கொரோனா கேஸ்கள் குறைந்துள்ள நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த உதவிய முக்கிய அதிகாரிகளின் குழுவை கோவைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பி உள்ளது. சென்னை சுகாதாரத்துறை கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் இருந்து முக்கிய அதிகாரிகள் அப்படியே கோவைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

1 வாரம்
அடுத்த ஒரு வாரத்திற்குள் கிராப் சரிய வேண்டும் என்ற கட்டளை இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். கொரோனா காய்ச்சல் கேம்ப், கூடுதல் வேக்சின் முகாம், கட்டுப்பாட்டு பகுதி கண்காணிப்பு, வீடு வீடாக சோதனை என்று பல முக்கிய டாஸ்க்குகள் இந்த குழுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். சென்னையில் கேஸ்கள் குறைக்கப்பட்டது போலவே இங்கும் குறைக்க வேண்டுமென்பதே இவர்களுக்கு தரப்பட்டுள்ள டாஸ்க்.

கோவை முக்கியம்
கோவை முக்கியம்.. எங்கும் தமிழகத்தில் கேஸ்கள் வர கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. முக்கியமாக கோவையில் திமுக எம்எல்ஏக்கள் யாரும் இல்லை . இதனால் அந்த மாவட்டத்தை நாம் கைவிட்டது போன்ற பிம்பம் வர கூடாது. அதனால் கோவையில்தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றது திமுக அரசு கருதுவதாக தகவல்கள் வருகின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications