எங்கேயாவது மிஸ் ஆகட்டும்.. ஸ்ட்ரிக்ட்டாக ‘வார்னிங்’ கொடுத்த ஸ்டாலின்.. அரண்டு போன மா.செக்கள்!
சென்னை: "இப்பவே சொல்லிடுறேன்.. எந்த ஏரியாவில் ஓட்டு குறைஞ்சாலும் அவங்க வந்து பதில் சொல்லணும்" என ஸ்ட்ரிக்ட் ஆக மாவட்ட செயலாளர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணியில், கூட்டணி கட்சிகள் 19 தொகுதிகளிலும், திமுக நேரடியாக 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 10 சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் கட்சி விருப்ப மனு பெற்றுள்ள நிலையில், நாளை இரவு வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
திமுக மா.செக்கள் கூட்டம் - கண் சிவந்த ஸ்டாலின்: இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. திமுகவின் 72 மாவட்ட செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேர்தல் பிரசாரம், தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், "நம்முடைய கூட்டணிக் கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள். அதனால் நட்புணர்வோடு கலந்து தொகுதிப் பங்கீடு செய்திருக்கிறோம். சில தொகுதிகளைப் பெற்று சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம். பலம் வாய்ந்த பெரிய கூட்டணியில் இது இயல்பானது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம்; தமிழ்நாட்டோட நலன் முக்கியம்; நாட்டோட எதிர்காலம்தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும்.
நீங்கதான் பொறுப்பு: மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் அவரவர் மாவட்டங்களைச் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளைக் கூடுதலாக பெற்று தரும் பொறுப்பு சாரும். ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் அதற்கு அந்த மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பு.
தொகுதி மட்டுமில்லாமல் தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய - நகரம் - பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன். எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்பவே சொல்லி விடுகிறேன். இதை ரொம்ப கண்டிப்போடவும் சொல்லுறேன்.
இந்த ஸ்டாலின் தான் வேட்பாளர்: எல்லா தொகுதியிலயும் ஸ்டாலின்தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும். தோழமைக் கட்சிகளையும் இணைத்து தேர்தல் பணிக்குழுக்களை அமைக்க வேண்டும். போஸ்டர்கள், துண்டறிக்கைகளில் அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் படங்களுக்கும் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும்.
வேட்பாளர் யாராக இருந்தாலும் அரவணைத்து மக்களிடம் அழைத்துச் செல்லுங்கள். வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பதுதான் ரொம்ப முக்கியம்! மக்களை நேரடியா சந்திக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும்.
இந்தியா கூட்டணி பெறப்போகும் வெற்றி சமூக நீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான கருத்தியல்களை தமிழ்நாட்டில் விதைக்கலாம் என்ற எண்ணமே, இனிமே பாசிச வெறிபிடித்த பா.ஜ.க.வுக்கு கனவிலேயும் வரக்கூடாது. அப்படிப்பட்ட மாபெரும் வெற்றியை நாம் பெற வேண்டும். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகள்லயும் நாம தான் வெற்றி பெற போகிறோம் என்பது உறுதி! ஜூன் 4-ஆம் தேதி வெற்றிச் செய்தியோட வந்து என்னைச் சந்தியுங்கள்!" எனப் பேசியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
-
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
நைட்டு ஃபுல்லா விட்டு விளாச போகுது மழை.. மதுரை உள்பட 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாளைக்கு விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் எச்சரிக்கை -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
62 தொகுதிகளில் சர்ஜிக்கல் திமுகவின் மெகா ஆபரேஷன்.. அதிமுகவுக்கு எதிராக ரகசியமாக இறங்கிய 2 டீம்? -
"எனக்கும் மரணம் வரும்.. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின் -
கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம்












Click it and Unblock the Notifications