கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்! பொங்கலுக்கு ரெடியாகும் மக்கள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து நிலையத்தை பேட்டரி கார் மூலம் சுற்றி பார்த்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் 2002 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வருவர். அது போல் பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவர்.

இதனால் பண்டிகை காலங்களில் இடநெருக்கடி ஏற்படுகிறது. இதையடுத்து 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
அதாவது 400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் கட்டிமுட்டிக்கப்பட்டது. கடந்த பொங்கலுக்கே இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் தள்ளிபோனது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி பேருந்து நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக இருக்கின்றனவா என்பதை மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் ஆய்வு செய்து சில குறைகளை அரசுக்கு சுட்டிக் காட்டியது.
அவை சரி செய்யப்பட்டது. இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 86 ஏக்கர் பரப்பளவில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 14 நடைமேடைகள் உள்ளன. நாளொன்றுக்கு 840 தனியார் பேருந்துகளுடன் 2130 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்து நிலையத்தில் அவசர சிகிச்சை மையம், தாய்மார்களுக்கான பால் ஊட்டும் அறைகள், உணவகங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான தங்கும் விடுதிகள், கடைகள், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்காக தனித்தனி கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உலகத்தரம் வாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் 5 அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பேருந்து நிலையத்தை பேட்டரி வாகனத்தில் அமர்ந்து பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நெடுந்தூர பேருந்துகளுக்கு தனியாகவும் , மாநகர பேருந்துகளுக்கு தனியாகவும் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாகவும் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலைய திறப்பையொட்டி தூண்கள் முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் வாழை மரங்கள், பேனர்கள் கட்டப்பட்டுள்ளன.
திறப்பு விழாவுக்கு பொதுமக்கள், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நிகழ்வுக்கு வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்போது திறப்பு, அப்போது திறப்பு என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்ய வந்த அமைச்சர் சேகர்பாபு பொங்கலுக்குள் திறக்கப்படும் என்றார். அந்த வகையில் இந்த பேருந்து நிலையம் இன்று திறக்கப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications