“மாநில சுயாட்சி”.. அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்.. சட்டப்பேரவையில் நாளை தீர்மானம்!
சென்னை: சட்டப்பேரவையில் நாளை முக்கிய தீர்மானத்தை கொண்டு வர இருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநில சுயாட்சி தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை தீர்மானத்தை முன்மொழிகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில் விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடுவதாக, கடந்த மார்ச் 25 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

"இந்த மொழித் திணிப்பின் மூலமாக மாநிலங்களை, மாநில மொழிகளை, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமைப் பகுதிகளாக நினைப்பதால்தான் இதுபோன்ற மொழித் திணிப்புகளும், நிதி அநீதிகளையும் செய்கிறார்கள். எனவே, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைக் காக்கவும் - மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ்மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்து, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்" என அறிவித்திருந்தார்.
அதன்படி, நாளை தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அநீதி இழைத்து வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வரும் சூழலில் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ள இந்த தீர்மானம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
எகிறும் எதிர்பார்ப்பு! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை! -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications