அமித்ஷாவிடம் விழுந்து எடப்பாடி பழனிசாமி சரண்டர் ஆகிவிட்டார்.. முதல்வர் ஸ்டாலின் நேரடி அட்டாக்!
சென்னை: அமித்ஷாவிடம் விழுந்து எடப்பாடி பழனிசாமி சரண்டர் ஆகிவிட்டார் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு பலிக்காது என்று கூறிய ஸ்டாலின், வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாமல்லபுரத்தில் திமுக சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முன்னெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், திமுக மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 2026 சட்டசபைத் தேர்தலில் வென்று 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும். 6வது முறையாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் நாம், 7வது முறையாக ஆட்சி அமைப்போம்.
தேர்தல் எனும் தேர்வுக்கு முன்னதாக நாம் செய்யும் ஒரு ரிவிஷன் தான் பயிற்சிக் கூட்டம். தமிழ்நாட்டு மக்கள் திராவிட ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். 2019ஆம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். சுணங்கி சும்மா இருந்துவிட்டால், நாம் ஒரே இடத்தில் தேங்கிவிடுவோம்.. அது தேக்கம்..
உழைப்பை கொடுத்து லட்சியத்தை நோக்கி இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது இயக்கம். 2021 தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் மீதமுள்ள சிலவற்றையும் நிச்சயம் நிறைவேற்றி தருவோம். திமுக அரசின் திட்டங்களின் சாதனைகள் மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் சென்று சேர்ந்திருக்கிறது. 2026 சட்டசபைத் தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம்.
நமது தொடர் வெற்றிகள் நமது எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2026ல் நடக்கவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். தலைநிமிர்ந்து நிற்கும் நம் ஆட்சியா, டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா என்று தீர்மானிக்கும் தேர்தல். இந்தி, சமஸ்கிருதம், ஜிஎஸ்டி, புதிய கல்விக் கொள்கையின் பெயரால் தமிழ்நாட்டுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது.
அதனால் தமிழ்நாட்டின் சுயமரியாதையையும், தனித்தன்மையையும் காப்பாற்றப் போகும் தேர்தல். தமிழ்நாட்டை அழிக்க இன எதிரிகளும், தமிழ் துரோகிகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வருகிறார்கள். திமுக இந்த மண்ணில் இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு பலிக்காது. அது அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் பாஜக குறுக்கு வழிகளை நாடுகிறது.
வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர்கள் அனைவரும் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். பெயரளவில் திராவிட கட்சியாக இருந்த அதிமுகவை அமித்ஷாவிடம் சரண்டர் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.
விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறிப் பார்த்தார். ஆனால் யாரும் போகவில்லை. எடப்பாடி பழனிசாமி பேசுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. கட்சியின் உரிமைகளையே பாஜகவிடம் அடகு வைத்தவர்களுக்கு மக்கள் உரிமைகளை பற்றி கவலைப்பட நேரமிருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications