Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வியர்வை சிந்தி உழைக்கும் ஏழைகளின் சம்பள பணத்தை விடுவிக்க மனமில்லையா?- ஸ்டாலின் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேகாத வெயிலில் வியர்வை சிந்தி உழைக்கும் ஏழைகளின் சம்பள பணத்தை விடுவிக்க மனமில்லையா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் காந்தியை பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான 100 நாள் வேலை திட்டத்தையும் பிடிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.

mk stalin 100 days tamil nadu 100

இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு!

வேண்டப்பட்ட கார்ப்பரேட்டுகள்

உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?

இன்றைய திமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும்! இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வறுமையை ஒழிக்க

கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2005 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கும் திட்டம் ஆகும். 5 கி.மீ. சுற்றளவுக்குள் ஓராண்டில் 100 நாட்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. கிராமங்களில் உள்ள சாலைகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்டவைகளில் பணியாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

எத்தனை பேர்

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 740 மாவட்டங்களில் 13.42 கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 17 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ 319ஆக இருந்த 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் தற்போது ரூ 336 ஆக அதிகரித்து வழங்கப்படுகிறது.

ஊதிய உயர்வு

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என சொல்லப்படுகிறது. அதிகபட்சமாக ஹரியானாவில் ரூ 26 உயர்த்தப்பட்டு அங்கு ரூ 400 ஆக ஊதியம் உயர்ந்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.3796 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் இருக்கிறது என தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதை கண்டித்து திமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

9 வாரங்களாக ஊதியம் தரவில்லை

9 வாரங்களாக இந்த ஊதியம் கிடைக்காததால் தமிழகத்தில் இந்த ஊதியத்தை நம்பிய மக்கள் வாடகை கொடுக்க வழியில்லாமல் வீட்டை காலி செய்ய சொல்வதாக பெண்கள் வேதனையுடன் தெரிவித்த வீடியோவை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+