சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா! நிறைவேறிய "வேண்டுதல்".. நெகிழ்ச்சியில் குளிர்ந்து போன துர்கா ஸ்டாலின்.. ரெடியாகிறதாம் தங்க தகடு

Google Oneindia Tamil News

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு நடத்த உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தீவிர திராவிட கொள்கை கொண்டவர். இறை வழிபாட்டை பின்பற்றுபவர் கிடையாது.

இருந்தாலும் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர். பல்வேறு கோவில்களில் இவர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி இருக்கிறார்.

ராஜ்யசபாவுக்கு போகும் பிரபல நடிகர்..? - திடீர் மீட்டிங்கின் பின்னணி என்ன? - பரபரக்கும் தகவல்கள்!ராஜ்யசபாவுக்கு போகும் பிரபல நடிகர்..? - திடீர் மீட்டிங்கின் பின்னணி என்ன? - பரபரக்கும் தகவல்கள்!

ஸ்டாலின்

ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினும் துர்கா ஸ்டாலினின் தனிப்பட்ட கடவுள் நம்பிக்கை, விருப்பங்களில் தலையிட்டது கிடையாது. துர்கா ஸ்டாலின் தமிழ்நாடு முழுக்க பல்வேறு கோவில்களுக்கு செல்வது வழக்கம். முக்கியமாக பெருமாள் கோவில்கள் பலவற்றுக்கு துர்கா ஸ்டாலின் சென்று இருக்கிறார். வெளிப்படையாக தன்னுடைய கடவுள் பக்தியை இவர் வெளிப்படுத்தி இருக்கிறார். தேர்தல் சமயத்திலும் இவருக்கு நிறைய வேண்டுதல்கள் இருந்ததாக கூறப்பட்டது.

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை

தேர்தல் சமயத்தில் திமுக வெற்றிபெற வேண்டும். முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்க வேண்டும் என்று துர்கா ஸ்டாலின் பல்வேறு இடங்களில் பிரார்த்தனை, வேண்டுதல்களை செய்ததாக கூறப்பட்டது. முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றால், வேண்டுதல்களை நிறைவேற்றினால் காணிக்கை கொடுப்பேன் என்று துர்கா ஸ்டாலின் வேண்டியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தன்னுடைய வேண்டுதல் நிறைவேறியதால் துர்கா ஸ்டாலின் தற்போது பல்வேறு கோவில்களுக்கு காணிக்கை கொடுக்க இருக்கிறாராம்.

கோவில் காணிக்கை

கோவில் காணிக்கை

அதன்படி இன்று சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு நடத்த உள்ளார். அங்கு அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை துர்கா துவக்கி வைக்க உள்ளார். முதல்வராக ஸ்டாலின் ஆக வேண்டும் என்று இங்கு வேண்டுதல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த வேண்டுதல் நிறைவேறியதால் மனம் குளிர்ந்து அவர் இந்த காணிக்கையை செலுத்த உள்ளாராம்.

தங்க தகடு

தங்க தகடு

ஆனால் தங்க தகட்டிற்கு இவர் எவ்வளவு கொடுக்க போகிறார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே கோவில் வசம் 20 கிலோ தங்கம் உள்ளது. அதேபோல் மதுரை ஆண்டாள் பேரவையினர் 36 கிலோ தங்கம் வழங்க உள்ளனர். இந்த நிலையில்தான் துர்கா ஸ்டாலின் இங்கு தங்க தகடு வேயும் பணியை துவங்கி வைக்க உள்ளார்.

English summary
CM Stalin wife Durga to inaugurate Golden Roof ceremony in Sivagangai temple. சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு நடத்த உள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X