மண்ணுலகின் உயிர்களை ஈன்று! அன்பின் மொழியை அறிமுகம் செய்த அற்புத கடவுள்! ஸ்டாலின், விஜய் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்னையர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முதல்வர் தனது தாயுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துகளை கூறியுள்ளார். அது போல் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

mother s day

ஆண்டுதோறும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்டாலின்: அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் #MothersDay வாழ்த்துகள்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அன்பின் முழு வடிவமாகவும், தியாகத்தின் முழு உருவமாகவும், பிரபஞ்சத்தின் வாழ்வை
அழகாய்; அர்த்தமாய் மாற்றிடும் உயிரும் மெய்யுமான ஒப்பற்ற அன்னையின்
மகத்துவத்தை போற்றுவதோடு உயிருக்குள் உயிர் கொடுத்து உதிரத்தை உணவாக்கி உலகத்தை உனதென தந்த உன்னத அன்னையர் அனைவருக்கும் "அன்னையர் தினம்" வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @AIADMKOfficial என தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்: இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உலக அன்னையர் நாள்: அன்பின் கடன் தீர்ப்பதற்கான விடாமுயற்சி! பா.ம.க. நிறுவனர் - தலைவர் மருத்துவர் அய்யா வாழ்த்து.

ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் நாள் கொண்டாடப்படுகிறது. உண்மையில் இது கொண்டாட்டம் அல்ல. அன்னையர் நமக்கு அளித்த உயிர், அன்பு, கருணை, வாழ்க்கை உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி சொல்வதற்கான உன்னத முயற்சி தான் அன்னையர் தினம்.

ஆனால், தொடுவானத்தை எப்படி தொட முடியாதோ, அதேபோல் அன்னைக்கான நன்றிக்கடனையும் நம்மால் அடைக்கவே முடியாது. அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனாலும், எப்படியாவது அதை சாதித்து விட மாட்டோமோ என்ற விடா முயற்சி தான் நம்மை அதை நோக்கி தள்ளுகிறது. அந்தக் கடனை நம்மால் தீர்க்க முடியாது. ஆகவே ஒவ்வொரு வினாடியும் அன்னையை வணங்கிக் கொண்டு, நன்றிக் கடன் செலுத்திக் கொண்டே இருப்போம். அன்னையர் வாழ்க! இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தவெக விஜய்: இதுகுறித்து நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள். அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை இவ்வுலகில்! தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். இவ்வாறு விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+