ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.. இலங்கை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்
சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதன்பிறகு இன்று (12-11-2024) நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் விசை படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துகிறது.
09.11.2024 அன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் பதிவு செய்யப்பட்ட 2 இயந்திரயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் ஒரு பதிவு செய்யப்படாத படகில் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
மேலும் 12.11.2024 அன்று நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடி படகில் மீன்பிடிக்க சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்ப்பட்டுள்ளனர்.கடந்த 7 ஆண்டுகளில்இல்லாத அளவுக்கு 2024ம் ஆண்டில் தா் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்பயப்டுவதை தடுக்கவும், கைது செய்யபப்ட்டுள்ள அனைத்து மீனரவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகளை விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications