கிளாம்பாக்கத்தில் இருந்து சிட்டி உள்ளே போகணுமா.. இதை முதலில் பாருங்க! பஸ் ஸ்டாண்டில் வந்த புதிய வசதி
சென்னை: கிளாம்பாக்கம் எம்டிசி டெர்மினஸ் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை இணைக்கும் புதிய பாதையை சென்னை மாநகராட்சி ஆணையம் உருவாக்கியுள்ளது.
இரண்டு படிக்கட்டுகளுடன் கூடிய புதிய பாதை மற்றும் வெளியேறும் எண் 3 சாலை வழியாக ஒரு சாய்வு பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கே புதிய எம்டிசி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் இது பயணிகளை முனையத்திற்கு நெருக்கமாக கொண்டு வரும்.

எஸ்கலேட்டர்கள் மற்றும் லிஃப்ட்கள் இரண்டையும் இணைக்கும் வகையில் தற்போதுள்ள மினி-சுரங்கப்பாதையுடன் இந்த புதிய பாதை கூடுதலாக உள்ளது. எம்டிசி பேருந்து நிலைய கட்டுமானம் முடிந்ததும் மக்கள் இதை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, 30.01.2024 முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 90 சதவிகித அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 10 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இங்கே பயணிகள் சாலையை கடக்க போதிய வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இங்கே இருக்கும் சிக்னல் கூட 200 மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் எதிர் திசையில் செல்லும் பேருந்துகள் சிக்னல் தாண்டி சரியாக பேருந்து நிலையத்திற்கு எதிரே வலதுபுறம் சாலையில் நிறுத்துகின்றன. இதனால் மக்கள் சிக்னல் வரை சென்று கிராஸ் செய்யாமல் இறக்கிவிடப்பட்ட இடத்தில் இருந்தே கிராஸ் செய்யும் நிலை உள்ளது.
அங்கே ஜீப்ரா கிராஸிங் இல்லை. இந்த ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் மக்கள் கடுமையாக சிரமப்படுகின்றனர். அதுவும் சாலை தடுப்பும் மக்கள் செல்ல இடையூறாக உள்ளது. பேருந்து நிலையத்திற்கு சரியாக எதிரே ஜீப்ரா கிராஸிங் அமைத்து, சாலை தடுப்பும் போடப்பட்டால் மக்கள் கிராஸ் செய்ய வசதியாக இருக்கும். அதேபோல் வெளியூர் ஆட்கள் வசதிக்கு ஆங்கிலம், தமிழில் கிளாம்பாக்கம் என்ற சாலை சைன் வைக்கப்பட்டாலும் மக்களுக்கு வசதியாக இருக்கும்.
பேருந்து நிலையத்திற்கு எதிரே இறக்கிவிடப்படும் சிலர் பேருந்து நிலையத்திற்கு ஜிஎஸ்டி ரோட்டை கடந்து செல்ல வேண்டும். ஆனால் சாலையை கடக்க அங்கே போதிய வசதி இல்லை. ஜீப்ரா கிராஸிங் இல்லை. சாலையில் சிக்னல் இல்லை.
இதனால் மக்கள் சாலையை கடப்பது மிகவும் சிரமமான விஷயமாக மாறி உள்ளது. இதனால் உடனே அங்கே தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
பேருந்து நிலைய தூய்மை: தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்கும்.
இந்த நடவடிக்கை பயணிகளுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நாட்டிலேயே சிறந்த பேருந்து நிலையமாக இது இருக்க வேண்டும் , உலக தரத்திற்கு இணையாக வளாகத்தை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்படி தனியாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகள் + 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.
விமான நிலைய மாதிரியை போல இந்த பேருந்து நிலையத்தை இயக்க உள்ளனர். விமான நிலையம் இப்படி தனியாரிடம் விடப்படுகிறது. அதை தனியார் அமைப்புகள் சரியாக இயக்கியும் வருகின்றன. முக்கியமாக சுத்தமாக பயன்படுத்துவது தொடங்கி பல்வேறு அடிப்படை பணிகளை தனியார்கள் சிறப்பாக செய்கின்றனர். 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தனியாரிடம் ஒப்படைக்கும் போதே இது சாத்தியம் ஆகும். இதற்காக சில தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்பந்தங்கள் கொடுக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள . 105 கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம் மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி, இந்த டெர்மினஸ் நாட்டிலேயே சிறந்ததாகப் பராமரிக்கப்படும் என்று கூறப்படுகிறது
அதே சமயம் தனியார் பராமரிப்பு கண்காணிக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனம் அதிக வாகன நிறுத்தம்/நுழைவு கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹோட்டல்களில் உணவுக்கான விலையும் கட்டுப்படியாக வேண்டும். இதற்கான ஆலோசனைகளையும் செய்து வருகிறோம். இதை அரசு தொடர்ந்து கண்காணிக்கும்.
புனேவை சேர்ந்த பிவிஜி நிறுவனம் ஒன்று இந்த பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும். இதே நிறுவனம்தான் குடியரசு தலைவர் அலுவலகத்தையும் நிர்வகிக்கிறது. கிளாம்பாக்கம் டெர்மினஸின் உட்புறம் தயாராக உள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications