நியூயார்க் போல.. சென்னையில் வருகிறது மிகப்பெரிய "சென்ட்ரல் காடு".. அதுவும் ஓஎம்ஆரில்.. அசத்தல்!
சென்னை: சென்னை ஓஎம்ஆர் பகுதியில் பிரம்மாண்ட நவீன வனப்பகுதி உருவாக்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.
சிறுசேரியில் நகர்ப்புற வனத்தை உருவாக்க வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தனிடம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகர்பாபு, 5 கோடி ரூபாய்க்கான காசோலையை நேற்று வழங்கினார். ஏப்ரல் 2023 இல் மாநில பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நிதி வழங்கப்பட்டு உள்ளது.

சிறுசேரி அருகே தற்போது உள்ள சிறிய வனப்பகுதி கட்டிட மேம்பாடுகளால் சிதைந்து வருவதால், சி.எம்.டி.ஏ., 50 ஏக்கர் நிலப்பரப்பில், 5 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற காட்டுப்பகுதி ஒன்றை உருவாக்குகிறது. தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்ஷுல் மிஸ்ரா மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்வு செய்யப்பட்ட பகுதியில் தோட்டங்கள் அமைத்து, உட்காரும் இருக்கைகள், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும். திட்டம் முடிந்ததும், பொதுமக்கள் இந்த புதிய நகர்ப்புற வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முழு திட்டமும் CMDA நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்: இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் பார்க் கொண்டு வர உள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் உள்ள இடத்தில் என்ன திட்டம் கொண்டு வரப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி இங்கே சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம். கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் 7 ஏக்கர் பூங்கா அமைக்க ஆணையம் (சிஎம்டிஏ) டெண்டர் எடுத்துள்ளது. மிகப்பெரிய பூங்காவை இங்கே அமைக்க உள்ளனர். பெங்களூரில் உள்ள கப்பன் பார்க் பூங்கா போல பிரம்மாண்டமாக பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications