மளிகை வீட்டுக்கே வருது.. ஒரே கிளிக்கில், உங்க வீடு தேடி 64 பொருட்கள்..தமிழக அரசின் "கூட்டுறவு சந்தை"
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், அடுத்தக்கட்ட அதிரடியை கூட்டுறவுத்துறை பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பானது, பெருத்த மகிழ்ச்சியை கூட்டி வருகிறது.
ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் சமீபத்தில் உறுதி தந்திருந்தார்.. அதன்படியே, அதை நடைமுறைப்படுத்தியும் காட்டி வருகிறார்.

அதேபோல, ரேஷன் கடைகளில் எண்ணற்ற சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக, இப்போதும் புது அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
கூட்டுறவு சந்தை: கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் வசதியாக, "கூட்டுறவு சந்தை" ("Co-Op Bazaar") என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது... இந்த செயலியைத்தான், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்திருக்கிறார்..

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் சொன்னதாவது: "கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கடைகளுக்கு வந்துதான் வாங்கவேண்டும் என்கிற நிலையை மாற்றி, நுகர்வோர் எளிதாக அவர்களது இல்லங்களில் இருந்தே பொருட்களை பெறுகின்ற வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 8 சங்கங்களின் உற்பத்திபொருட்கள் இதில் சந்தைப்படுத்தப்பட உள்ளன.
இச்செயலி மூலம் 64 வகையான பொருட்கள் பட்டியலிடப்பட்டு, ஆர்டர் செய்யப்படும்போது, அவரவர் இருப்பிடங்களுக்கு உணவுப்பொருட்கள் கொண்டுவந்து சேர்க்கப்படும்...
புதிய செயலி: அதாவது, கூட்டுறவு விற்பனை சங்கங்கள் தயாரித்த 44 வகையான மளிகை பொருட்கள், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் 20 வகையான உயர்தர நுண்ணூட்டச் சத்துகள், உயிரி உரங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள் மற்றும் நீரில் கரையும் உரங்கள் என மொத்தம் 64 பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், ஈரோடு, பெருந்துறை, சைதாப்பேட்டை கூட்டுறவு சங்கங்கள், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் பண்டகசாலை, கொல்லிமலை மற்றும் சத்தியமங்கலம் பெரும் பன்னோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் மளிகை, தேன், மஞ்சள் துாள், மிளகாய் துாள் போன்றவைதான் அந்த 44 பொருட்கள் ஆகும்.. இந்த திட்டம் நடப்பாண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு இப்போது செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
வேண்டுகோள்: இந்த செயலியை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி தரமான கூட்டுறவு தயாரிப்புகளை பெற்று பயனடைய வேண்டும். தக்காளி விலை உயர்வு தமிழகத்தில் மட்டுமல்ல... இந்தியா முழுவதுமே உள்ளது. தக்காளியை குறைந்த விலைக்கு விற்கும் அரசின் நடவடிக்கைக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், பிற மாநில மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தக்காளி விலையை மேலும் குறைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தக்காளியை பதுக்கிவைப்பதாக இதுவரை தெரியவில்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications