குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. இனி "இதுவும்" ரேஷனில் கிடைக்க போகிறது.. மத்திய அரசே சொல்லிடுச்சு
சென்னை: ரேஷன் கடைகளில் கூடுதலாக மற்றொரு பொருளை வழங்கப்போகிறார்களாம். இத்தனை நாள் முன்வைத்த கோரிக்கையையடுத்து, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
3 மாதங்களுக்குமுன்பு, அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படுவது குறித்து கூறியிருந்தார்.

4 மாவட்டங்கள்: அதில், "தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்... அதன்படி, முதற்கட்டமாக, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதனிடையே, உழவர் உழைப்பாளர் கட்சி, தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழு, விவசாயிகள் சங்கம் என முக்கியமான அமைப்புகள் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை விடுத்தன.
அதில், பாமாயில் கொள்முதல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.. தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்திருந்தனர்.
தேங்காய் எண்ணெய்: அத்துடன், தமிழக தேங்காய் விவசாயிகளிடம் இருந்தே, தேங்காய்கள் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யாக மக்களுக்கு கொடுக்க வேண்டும், கொப்பரைக்கு உரிய விலை வேண்டும்" என்றும் விவசாய சங்கங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
இந்நிலையில், மத்திய அரசு, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டெல்லியில், மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரியை, விவசாயிகள் குழுவினர் நேரில் சென்று சந்தித்து பேசினர்.
செல்லமுத்து: உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமையிலான விவசாயிகள், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோரை சந்தித்து, விவசாயம் குறித்த பல்வேறு விவகாரங்களை பேசினர்..
அப்போது, தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில், தேங்காய் எண்ணெய் வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
மகிழ்ச்சி தகவல்: உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து இதுகுறித்து சொல்லும்போது, "தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடனாளியாகி வருகின்றனர். ரேஷனில், பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்காததே, இதற்கெல்லாம் காரணம். தமிழகத்தில் போராடுவது பயனற்றது என்பதால்தான், உரிய மத்திய அமைச்சர்களை நேரில் சந்திப்பது என்று தீர்மானித்து டெல்லிக்கே புறப்பட்டு வந்தோம்.
சோதனை அடிப்படையில், முதல் கட்டமாக, தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களின் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கப்படும்... மக்கள் வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்படும் என்று மத்திய வேளாண் இணை அமைச்சர் உறுதியளித்திருக்கிறார்" என்றார்.
பாமாயில்: இந்த தகவல் தமிழக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. எனினும், பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் என்பதால், பாமாயில் இனி ரேஷனில் முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிடுமா? என்று தெரியவில்லை. பாமாயிலை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், தேங்காய் எண்ணெய்யைக்கு மாறுவார்களா? அல்லது தேங்காய் எண்ணெய்யுடன், பாமாயிலும் சேர்த்து வழங்கப்படுமா? என்பதும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications