‛‛ஒற்றை ஓட்டு’’ அண்ணாமலை.. செந்தில் பாலாஜியை விமர்சிப்பது ஏன்? பிளாஷ்பேக் சொன்ன திமுக ராஜீவ் காந்தி
சென்னை: சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்து வருவது ஏன் என்பது பற்றி திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி விளக்கம் அளித்துள்ளார். சட்டசபை தேர்தலில் அண்ணாமலை பெற்ற ஒற்றை ஓட்டு பற்றிய பிளாஷ்பேக்கை அவர் கூறினார்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் ஜமோசா முபின் என்பவர் இறந்தார். இவரிடம் 2019ல் என்ஐஏ விசாரணை நடத்தி இருந்தது.
இதில் சதிச்செயல்கள் இருக்கலாம் என கருதப்பட்டது. மேலும் ஜமேஷா முபின் உடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை VS செந்தில் பாலாஜி
இந்த கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் இடையே வார்த்தை மோதல் நீடித்து வருகிறது. கோவை மாவட்ட பொறுப்பாளராக செந்தில் பாலாஜி உள்ள நிலையில் தான் அவரை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார். செந்தில் பாலாஜியும், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார். அரசியலில் அண்ணாமலை கோமாளி என விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலை விமர்சனம்
இந்நிலையில் அண்ணாமலை இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அறிக்கையில், ‛‛கோவை சம்பவம் தொடர்பாக இதுவரை தமிழக முதலமைச்சர் மவுனம் காப்பது அனைவரும் அறிந்ததே. இந்த துறைக்கும் சற்றும் தொடர்பே இல்லாத சாராய அமைச்சர் கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதலை பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்?'' என கேள்வி எழுப்பி இருந்தார்.

ராஜீவ் காந்தி பேட்டி
இந்நிலையில் தான் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னையில் திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அண்ணாமலையை கடுமையாக சாடினார். ஆதாரங்கள் இன்றி பொய்யான குற்றச்சாட்டை அவர் கூறி வருகிறார். கோவையை பதற்றத்துடன் வைக்கும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார் என விமர்சித்தார்.

ஒற்றை ஓட்டு அண்ணாமலை
இந்த வேளையில், உளவுத்துறைக்கும் செந்தில் பலாஜிக்கும் என்ன தொடர்பு என அண்ணாமலை கேள்வி எழுப்பியது பற்றி கேட்டார். இதற்கு ராஜீவ் காந்தி, ‛‛அண்ணாமலை அரசியல் பிழைப்புக்காக இதை செய்கிறார். பெருமைமிகு கன்னடன் எனக்கூறிய அண்ணாமலை அரவக்குறிச்சியில் (அண்ணாமலை தொகுதி) தொகுதி போட்டியிட்டபோது பள்ளப்பட்டி எனும் கிராமத்தில் 214வது வாக்குச்சாவடியில் ஒரு ஓட்டு மட்டுமே வாங்கினார். இங்கு வெறும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற அண்ணாமலை அரசியல் ரீதியாக செந்தில் பாலாஜியை வீழ்த்த நினைக்கிறார்.

கீழ்த்தரமான அரசியல்
கோவையின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் செந்தில்பாலாஜி செயல்பட்டு வருகிறார். ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. இதுபோன்று இன்னொறு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காக செயல்பட்டு வருகிறார். மக்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். உண்மையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அண்ணாமலை செயல்பட்டு இருந்தால் மக்களை அழைத்து நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம். ஒன்றிணைந்து பயங்கரவாதிகளை அடையாளம் காண்போம் என தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் பந்த் நடத்துவதாக பாஜக கூறிய கீழ்த்தரமான அரசியலை செந்தில் பாலாஜி அம்பலப்படுத்தியதால் தான் அண்ணாமலை அவரை குற்றம்சாட்டி வருகிறார்'' என்றார்.
-
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம்












Click it and Unblock the Notifications