கோல்ட் காபி முதல் பலாப்பழ ஐஸ்கிரீம் வரை! ஆவினில் அறிமுகமான 10 புதிய பொருட்கள்! விலை தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் புதிதாக 10 பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. புதிதாக ஆவினில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பொருட்கள் என்னென்ன? அதன் விலை எவ்வளவு? என்பது பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் பால், ஐஸ்கிரீம், இனிப்பு, நெய் உள்ளிட்ட பால் சார்ந்த 100க்கும் அதிமான பொருட்கள் விற்பனை செய்யப்ட்டு வருகின்றன. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் தான் ஆவின் சார்பில் புதிதாக 10 பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று புதிய 10 பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார்.

10 பொருட்கள் என்னென்ன?
அதன்படி ஆவினில் புதிதாக அதன்படி கோல்டு காபி (Cold Coffee), வெள்ளை சாக்லேட் (White Chocolate), பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream), வெண்ணெய் கட்டி (Butter Chiplets), பாசுந்தி (Basundi), ஆவின் ஹெல்த் மிக்ஸ் (Aavin Health Mix), பாலாடைக்கட்டி (Processed Cheese), அடுமனை யோகர்ட் (Bake Yoghurt), ஆவின் பால் பிஸ்கட் (Aavin Milk Biscuit), ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku) உள்ளிட்டவை விற்பனைக்கு வந்துள்ளன.

விலை எவ்வளவு?
இதில் 45 கிராம் வெள்ளை சாக்லேட் விலை ரூ.30 ஆக உள்ளது. 200 மில்லி கோல்ட் காபி ரூ.35, 125 மில்லி பலாப்பழ ஐஸ்கிரீம் ரூ.45, 100 மில்லி பாசுந்தி ரூ.60, ஆவின் ஹெல்த் மிக்ஸ் 250 கிராம் ரூ.120க்கு விற்பனையாக உள்ளது. பாலாடைக்கட்டி 200 கிராம் ரூ.140, அடுமனை யோகர்ட் 100 கிராம் ரூ.50, ஆவின் பால் பிஸ்கட் 75 கிராம் ரூ.12, ஆவின் வெண்ணெய் முறுக்கு 2000 கிராம் ரூ.80 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பு எங்கு?
இந்த பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் தான் தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளது. கோல்ட் காபி, பலாப்பழம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட 10 புதிய பொருட்களும் சென்னை அம்பத்தூர் பால் பண்ணையிலும் மற்றும் ஊட்டியிலுள்ள பால் பண்ணைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன.

விலை உயர்வுக்கு நடுவே புதிய பொருட்கள்
சமீபத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வை காட்டி ஆவின் அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பொருட்களின் விலைகளை தனியார் நிறுவனங்கள் உயர்த்திய நிலையில் ஆவினும் உயர்த்தியது. இது பெரும் விவாதத்துக்கு உள்ளான நிலையில் தற்போது புதிதாக 10 பொருட்களை தமிழக அரசு ஆவினில் அறிமுகம் செய்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications