பொங்கல் பரிசு.. ரொக்கப்பணம், தரமான பொருட்கள்.. மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு.. தமிழக அரசு உத்தரவு!
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கப்பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எக்காரணத்தை கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும், பச்சரிசி, முழு கரும்பு ஆகியவை முழு தரத்துடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன்ம் பச்சரிசி மற்றும் சா்க்கரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதேபோல் ங்கல் பரிசுத் தொகுப்புக்கு தமிழ்நாடு விவசாயிகளிடம் இருந்து தான் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்றும் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் கூட்டுறவு, வேளாண்மை அதிகாரிகள் கரும்பை கொள்முதல் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கம் விநியோகம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் பொங்கல் பரிசுப் பொருட்கள், ரொக்கப் பணம் விநியோகம் தொடர்பான சுற்றறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், பொங்கல் பரிசுப் பொருட்கள், ரொக்கப் பணம் விநியோகம் 9ம் தேதிக்கு பின் தொடங்கப்பட வேண்டும் என்றும், மக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்க வசதியாக வரும் 13ம் தேதி ரேஷன் ஊழியர்களுக்கு பணி நாளாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 13ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் பொங்கல் பரிசுப் பொருட்களுக்கான டோக்கனை வரும் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விநியோகிக்க வேண்டும் என்றும், பொங்கல் பரிசுப் பொருட்கள் மக்களை சேர்வதற்கான பொறுப்பு மாவட்ட ஆட்சியர்கள் உடையது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பொருட்களின் தரம் உறுதிப்படுத்தப்பட்ட பின்பே ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், க்காரணத்தைக் கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications