மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்! ஆட்டம் போட்ட கல்லூரி மாணவிகள்! ஆசிரியரை அழைத்து எச்சரித்த மீனவர்கள்
மாமல்லபுரம்: சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துக்கிடையே கடலுக்குள் குளித்த கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆசிரியரை அழைத்து மீனவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாணவிகள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையிலிருந்து 290 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனால் நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. சென்னை கொரட்டூர் முதல் அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையம் வரை சாலையில் இரு புறங்களிலும் சுமார் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியிருந்தது. கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.
இதே போன்று அம்பத்தூர் பட்டரைவாக்கம் சாலை கருக்கு, கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம், டீச்சர்ஸ் காலனி, நகர், பட்டரைவாக்கம் பால் பண்ணை சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை காரணமாக வெள்ள நீர் புகுந்தது.
இது போல் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர். வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள கடல் சீற்றத்துடன் இருந்தது. இதனால் படகுகள் சேதமடைந்தன. அது போல் மாமல்லபுரத்தில் உள்ள கடலும் சீற்றத்துடனே காணப்பட்டது. இந்த நிலையில் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் மாமல்லபுரத்திற்கு ஆசிரியருடன் கல்லூரி மாணவிகள் சுற்றுலா வந்தனர்.
கடல் சீற்றத்துக்கு மத்தியிலும் கடலிலும் குளித்து அவர்கள் ஆட்டம் போட்டனர். ஆபத்தை அறியாமல் அவர்கள் கடற்கரையில் குளித்து செல்பி எடுத்ததை பார்த்த மீனவர்கள் அவர்களின் ஆசிரியரை அழைத்து எச்சரித்தனர். இதையடுத்து அந்த மாணவிகள் கடற்கரையை விட்டு வெளியேறினர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications