நில மோசடி புகார்.. விஷ்ணு விஷால் அப்பா மீது போலீஸ் வழக்கு.. சூரி நேரில் ஆஜராக சம்மன்!
நிலமோசடி வழக்கு தொடர்பாக விசாரிக்க நடிகர் சூரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
சென்னை: "சூரி சொன்ன பொய் அதிர்ச்சியாக இருக்கிறது.. வருத்தமாகவும் இருக்கிறது.. உண்மையை சொல்ல போனால் சூரிதான் அட்வான்ஸ் பணத்தை தர வேண்டும்" என்று நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் விளக்கம் தந்திருந்தார். இந்நிலையில், நிலம் வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக புகார் அளித்த நடிகர் சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
"வீரதீர சூரன்" படத்தில் நடித்த நடிகர் சூரிக்கு, ரூ.40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன்... இந்த நிலையில், தயாரிப்பாளர் தர வேண்டிய சம்பள பாக்கியைத் தர மறுத்த நிலையில், நிலம் வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் பணம் பெற்று ரூ. 2.70 கோடியை மோசடி செய்தாக புகாரளித்திருந்தார் நடிகர் சூரி.

இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வந்தது. கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, 'வீரதீர சூரன்' படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா ஆகிய 2 பேர் மீதும் அடையாறு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, சூரியின் இந்த புகார் உண்மையில்லை என்று நடிகர் விஷ்ணு விஷால் முன்னதாக டிவிட்டரில் விளக்கம் அளித்திருந்தார். அதில், "உண்மையில் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்க்கு சூரி தான், அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தர வேண்டும்.
"கவரிமான் பரம்பரை" படத்துக்காக 2017-ம் ஆண்டு நடிகர் சூரிக்கு அட்வான்ஸ் பணம் தரப்பட்டது.. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது... என் மீதும், என் அப்பா மீதும் வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது.
ஆனால் சட்டம், நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது.. சட்டம் அனுமதிக்கும் பாதையில் நாங்கள் செல்வோம். எல்லாம் தெளிவான பின் சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்" என்று கூறியிருந்தார். இந்த விளக்கத்தையடுத்து, நடிகர் சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் வருகிற 29-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications