வணிக நிறுவனங்களுக்கு திடீர் உத்தரவு.. இனி இப்படிதான்.. சாமிநாதன் அசத்திட்டாரே.. தமிழக அரசு அதிரடி
சென்னை: வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் குறித்து தமிழக அரசு முக்கிய உத்தரவினை மீண்டும் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சாமிநாதன் அந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தொழில் - வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழை பயன்படுத்துவதை சட்டமாக்க வேண்டும் என்றும், அனைத்து பொது இடங்களிலும் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும், கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் வலியுறுத்தல்கள் தொடந்து வந்தன..
குறிப்பாக, முக்கிய தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களுடம், அரசியல் கட்சி தலைவர்களும் இதற்காக பலவகையான போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

அரசாணைகள்: இதற்கு பிறகு, தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையம் வெளியிட்ட ஆணையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்று, 1948 மற்றும் 1959-ம் ஆண்டுகளில் திருத்தங்களும், அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டன.
இந்த விதி பின்பற்றப்படவில்லை என்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இதற்கு பிறகு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் பெரிதாக யாரும் செயல்படுத்தவில்லை.
தாய்மொழி: வெளிமாநிலங்களிலெல்லாம், பெயர் பலகையில் 80 சதவீதம் தங்களின் தாய்மொழியை பயன்படுத்தும்போது, தமிழகத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் மதுபானக் கடைகளில்கூட, "ஒயின் ஷாப், டாஸ்மாக்" என்று ஆங்கிலத்தையே தமிழில் எழுதி பயன்படுத்துவது ஏன்? வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாவிட்டால், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வணிகர்களுக்கு ஒருமுறை, எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
மா.சுப்பிரமணியன்: சென்னை மேயராக அன்று மா.சுப்பிரமணியன் பொறுப்பில் இருந்தபோது, இதற்கான நடவடிக்கையை அன்று எடுத்திருந்தார்.. அதாவது, வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வையும் அன்றே மேற்கொண்டிருந்தார் என்பதையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இந்த விழிப்புணர்வு தொடர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஒரு பேட்டி தந்திருந்தார்.
பெயர்ப்பலகை: அதில், தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களில் தமிழிலேயே பெயர் பலகை வைக்க வேண்டும்.. வணிக நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றில் பெயர் பலகைகள் தமிழில் வைப்பது குறித்து கண்காணிக்கப்பட்டு, விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்றும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று சாமிநாதன் அப்போது உறுதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்றும் இதே உறுதியை சாமிநாதன் தந்துள்ளார்.. வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும்.. தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது, இது மேலும் தொடரும் என்றும் அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழ் தமிழ்: தமிழகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆன்லைன் வர்த்தகம், ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற நிறுவனங்களின் பல பெயர்ப்பலகைகளில் முதன்மையான மொழியாக தமிழ் இல்லாத நிலைமை உள்ள நிலையில், அனைத்து பெயர்ப்பலகைகள் தமிழில் விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இனி எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்..!!!
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications