சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு
சென்னை: தமிழகத் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் உணவகத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல சிறிய ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஈரான்- இஸ்ரேல் போரால் சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் சீரற்ற முறையில் இருப்பதால், வழக்கமாக வரும் சிலிண்டர்கள் வராமல் ஓட்டல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர். "அடுத்த 2 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பில் சிலிண்டர் உள்ளது" எனப் பல உரிமையாளர்கள் பீதியைக் கிளப்பியுள்ளனர்.
அதிகாரப்பூர்வ ஏஜென்சிகளில் சிலிண்டர் கிடைக்காத சூழலைப் பயன்படுத்தி, கள்ளச்சந்தையில் ஒரு வணிக சிலிண்டர் 5000 ரூபாய் வரை விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இது சாதாரண விலையை விடப் பல மடங்கு அதிகம் என்பதால் சிறு வியாபாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
குறிப்பாக மிகக் குறைந்த லாபத்தில் இயங்கும் சிறிய டீக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள், அதிக விலை கொடுத்து கேஸ் வாங்க முடியாமல் தங்களது கடைகளைத் தற்காலிகமாக மூடி வருகின்றனர். "மூடவும் முடியாமல், நஷ்டத்தில் நடத்தவும் முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறோம்" என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கேஸ் தட்டுப்பாடு நீடித்தால், ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இது பொதுமக்களையும் நேரடியாகப் பாதிக்கும் என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வணிக சிலிண்டர் விநியோகத்தைச் சீர்படுத்த வேண்டும் என்றும், கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் இன்று கூட நிறைய சிறிய உணவகங்கள் எல்லாம் மூடப்பட்டன. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications