ஒரு மாதத்தில் 18 கொலை என்பது பொய்!10 கொலைதான் நடந்துள்ளது! சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி
சென்னை : சென்னையில் கடந்த இருபத்தி நான்கு நாட்களில் 18 கொலைகள் நடந்து இருப்பது என்பது தவறான தகவல், இந்த மாதத்தில் மொத்தம் சென்னையில் 10 கொலைகள் மட்டுமே நடந்துள்ளது. அந்த பத்து கொலைகளிலும் நான்கு கொலைகள் ஏற்கனவே முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களால் நடந்தவை என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக போதைப்பொருட்கள் கஞ்சா கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்கள் அதிகரித்து வருவது காவல்துறையினரை மட்டுமல்லாது பொது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல கொலை சம்பவங்களும் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் தொல்லை புகாரில் திமுக பிரமுகர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சென்னையில் அதிர்ச்சி
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக நேற்றிரவு பாஜக பிரமுகர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இது அரசியல் ரீதியான கொலை என பலர் கூறி வரும் நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி புகார்
கடந்த இருபத்தி நான்கு நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் கடந்த இருபத்தி நான்கு நாட்களில் 18 கொலைகள் நடந்து இருப்பது என்பது தவறான தகவல், இந்த மாதத்தில் மொத்தம் சென்னையில் 10 கொலைகள் மட்டுமே நடந்துள்ளது. அந்த பத்து கொலைகளிலும் நான்கு கொலைகள் ஏற்கனவே முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களால் நடந்தவை என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

காவல் ஆணையர் மறுப்பு
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " சென்னையில் கடந்த இருபத்தி நான்கு நாட்களில் 18 கொலைகள் நடந்து இருப்பது என்பது தவறான தகவல், இந்த மாதத்தில் மொத்தம் சென்னையில் 10 கொலைகள் மட்டுமே நடந்துள்ளது. அந்த பத்து கொலைகளிலும் நான்கு கொலைகள் ஏற்கனவே முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களால் நடைபெற்றது. மற்ற பிள்ளைகள் குடும்ப தகராறு உள்ளிட்ட காரணங்களால் நடைபெற்றது.

கொலைகள் குறைந்துள்ளது
தொடர் கொலைகள் என்பது தவறான தகவல்களைக் கொண்டது ஆகும். இரண்டாவதாக கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 25 கொலைகள் குறைவாகவே நடந்துள்ளது, எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். சென்னையில் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குற்றங்களின் எண்ணிகை வெகுவாகக் குறைந்துள்ளது" என பேசினார்.