Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களே உஷார்! உயிருக்கு உலை வைக்கும் ஏசிகள்! தீப்பிடிப்பதை தடுப்பது எப்படி? இதோ ஈஸி ‛டிப்ஸ்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது வெயில் கொளுத்தி வரும் நிலையில் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் திடீரென ஏசிகள் வெடித்து உடைமைகள் மட்டுமின்றி உயிர்பலியும் ஏற்படுகின்றன. இதனால் ஏசிகள் தீப்பிடித்து எரியாமல் தடுப்பதோடு, நாமும் பாதுகாப்பாக இருக்க இந்த எளிய ‛டிப்ஸை' பின்பற்றினாலே போதுமாம்.

தமிழ்நாட்டில் எப்போதும் தென்மேற்கு பருவழை என்பது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இன்னும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. மாறாக கோடை காலம் முடிந்தாலும் கூட வெயிலின் தாக்கம் மட்டுமே குறையவில்லை. இதற்கிடையே தான் அரபிக்கடலில் புதிதாக புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. பைபர்ஜாய் என இந்த புயலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 Common reasons for AC fires and how to prevent these? follow these steps

இருப்பினும் கூட தமிழ்நாட்டில் வெப்பம் தணியவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. மேலும் தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே மக்கள் ஏசியை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் நம்மில் பலருக்கும் ஏசியை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக வீடு, கடைகளில் பயன்படுத்தப்படும் ஏசிகள் தீப்பிடித்து எரிந்து பெரும் விபத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகின்றன.

அமெரிக்காவை எடுத்து கொண்டால் ஆண்டுக்கு ஏசி தீவிபத்தில் 29 பேர் வரை பலியாவதாகவும், 200 மில்லியன் டாலருக்கு அதிக மதிப்பில் இழப்புகள் ஏற்படுவதாகவும் ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதற்கு நம் மாநிலமான தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலும் சில இடங்களில் ஏசி தீப்பிடித்து வீடுகள் எரிந்தது மற்றும் உயிர் பலி ஏற்பட்டுள்ள வரலாறு உள்ளது. இதனால் ஏசி பராமரிப்பில் நாம் அலட்சியம் காட்டுவது என்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம்.

சரி, நிலைமை இப்படி இருக்க ஏசி எப்படி தீப்பிடிக்கிறது? அதனை தடுப்பது எப்படி? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். பொதுவாக ஏசி தீவிபத்துக்கு சரியான பராமரிப்பு இல்லாதது தான் காரணமாகும். அதாவது ஏசியில் காற்றுக்காக இருக்கும் இடைவெளியில் தூசிகள் அதிகமாக படியலாம். மேலும் ஏசி இயங்கும்போது அதிகப்படியான வெப்பம் உள்ளே உருவாகும். இந்த வெப்பத்தின் காரணமாக தூசிகள் பற்ற வாய்ப்புள்ளது. இதன்மூலம் தான் ஏசி தீவிபத்து ஏற்படுகிறது.

இன்னொரு காரணம் என்னவென்றால் பராமரிக்காமல் இருக்கும்போது தூசிகள் ஏசியில் காற்று வெளியேறும் இடங்களில் படியும். இது காற்றோட்டத்தை தடுத்து வெப்பத்தை உள்ளேயே தங்க வழிவகுக்கும். இந்த தடை என்பது ஏசியை செயலிழக்க செய்வதுடன் தீப்பிடித்து எரியவும் செய்யலாம். மற்றொரு காரணம் என்னவெனில் குறைந்த விலைக்கு கிடைக்கும் உதிரி பாகங்களை வாங்கி பொருத்துவது. இதுவும் ஏசியை சரிவர இயங்குவதில் பிரச்சனையை ஏற்படுத்தி தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. அதோடு நமக்கு பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 Common reasons for AC fires and how to prevent these? follow these steps

இருப்பினும் கூட இந்த ஏசி தீவிபத்தை எளிதாக நாம் தடுக்கலாம். இதற்கு முக்கிய விஷயம் என்பது ஏசிகளில் ஏதேனும் பொருள் சேதமடைந்தால் அல்லது பழுதானால் அதற்கு பதில் உயர்தர உதிரி பாகங்களை வாங்கி பயன்படுத்துவது. குறிப்பாக Split ACல் குளிரூட்டம் குழாய்களை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஏசியின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பதோடு முறைப்படி குறித்த காலத்தில் சர்வீஸ் செய்ய வேண்டும்.

இதற்கு அடுத்தப்படியாக ஏசிகளில் தூசிகள் படியாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதுதவிர ஏசி இருக்கும் அறையில் அதிக குப்பைகள் சேர்வதை நாம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இந்த 3 விஷயங்களை நாம் பின்பற்றினாலே போதும். ஏசிகள் தீப்பிடித்து எரியாமல் நீண்ட நாட்களாக நாம் அதன் சேவையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+