தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல்.. கிண்டி ஸ்டேசனில் பரபரப்பு
சென்னை: விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
சிபிஎம் இது தொடர்பாக வெளியிட்ட செய்தியில், விலைவாசி உயர்வுக்கு காரணமான மோடி அரசின் கொள்ளைகளை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வலியுறுத்தியும், சென்னையில் உள்ள கிண்டி ரயில் நிலைத்தில் ரயில் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர். இந்த கிண்டி ரயில் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிண்டி ரயில் மறியல் போராட்டம் காரணமாக சென்னையில் சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தி அழைத்து சென்றனர்.
சி.பி.ஐ(எம்) சார்பில் தமிழ்நாட்டில் 1 லட்சம் பேர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். வடசென்னை மாவட்டம் திருவொற்றியூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் பங்கேற்றனர்.

மதுரையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோக்சபா எம்பி சு.வெங்கடேசன் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மதுரை கட்டபொம்மன் சிலையில் இருந்து ரயில் நிலையம் வரை சென்ற ஊர்வலம் சென்ற சிபிஎம் தொண்டர்கள், பின் ரயில் நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதானி - அம்பானிக்கு கோடிக் கணக்கில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்மொழிந்தனர்.

மயிலாடுதுறையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற விரைவு ரயிலை மறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்ற போது, சிபிஎம் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும், இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திண்டுக்கல்லிலும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பழனி நகர் தபால் நிலையம் முன்பாக மறியல் செய்த 105 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் உள்ளிட்டு கலந்து கொண்டனர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications