3000 பேர்.. சென்னையில் திரண்ட கம்யூனிஸ்ட்கள்... ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி.. அதிரடி கைது
சென்னை: அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்படுவதாகவும், மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை ஆளுநர் மாளிகையை இன்று முற்றுகையிட முயன்றனர். மொத்தம் 3000 ஆயிரம் பேர் ஊர்வலமாக வந்ததால் சென்னை குலுங்கிய நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்என்ரவி தமிழக அரசால் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளாள். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பலபேர் தற்கொலை செய்து வரும் நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்என் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதுதவிர ஆளுநர் ஆர்என் ரவி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்டவை பற்றி பேசி வருகிறார். மேலும் திராவிடத்துக்கு எதிராகவும் அவர் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் ஆளுநர் ஆர்என் ரவிக்கு, ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து பல்வேறு கண்டனங்களை அக்கட்சியின் தலைவர்கள் பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் திமுக அதன் கூட்டணி கட்சி எம்பிக்களுடன் கையெழுத்து பெற்று ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் வழங்கி உள்ளது.
இதற்கிடையே தான் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படும் ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் சைதாப்பேட்டையில் துவங்கியது. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேசிய செயலாளர் டி ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்கள் கட்சி கொடியை கையில் ஏந்தி ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை இடைமறித்தனர். இதையடுத்து வாக்குவாதம் ஏற்படவே டி ராஜா உள்ளிட்ட தலைவர்கள், தொண்டர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சிபிஎம், சிபிஐ கட்சிகள் எந்த தொகுதிகளில் போட்டி? திருப்பரங்குன்றத்தில் நேரடியாக களமிறங்கும் திமுக! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications