பிரேக்கப்பான லிவ் இன் டுகெதர் வாழ்க்கை.. துணைநடிகை தற்கொலை.. தண்டனை கொடுங்கள்.. வாட்ஸ் ஆப்பில் கதறல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Actress Yashika: பிரிந்து சென்ற காதலன்.. துணை நடிகை தற்கொலை- வீடியோ

    சென்னை: கடந்த 4 மாதங்களாக இனித்து வந்த லிவ் இன் டுகெதர் வாழ்க்கையை காதலன் உதறி தள்ளியதால் மனமுடைந்த துணை நடிகை தற்கொலை செய்து கொண்டார்.

    கொளத்தூரை அடுத்த பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 22-வது தெருவில் வசித்தவர் யாசிகா(21). திருப்பூர் பூர்வீகமாக கொண்டவர் இவர், சினிமா , டிவி சீரியல்களில் துணை நடிகையாக நடித்தவர்.

    தற்போது சினிமாவில் மன்னர் வகையரா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
    சென்னை வடபழனியில் விடுதியில் வசித்து வந்தார். அப்போது செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்யும் பெரம்பூர் அரவிந்த் (22) பழக்கம் ஏற்பட்டது.

    3 நாட்களுக்கு முன்

    3 நாட்களுக்கு முன்

    இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன் ஜிகேஎம் காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன் இருவருக்கும் தகராறு என கூறப்படுகிறது.

    தற்கொலை

    தற்கொலை

    இதையடுத்து அரவிந்த், யாஷிகாவை பிரிந்து பெரம்பூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் மனமுடைந்த யாசிகா நேற்று முன் தினம் இரவு மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தக்க தண்டனை

    தக்க தண்டனை


    யாஷிகா இறப்பதற்கு முன்னர் வாட்ஸ் ஆப் மூலம் தனது தாயாருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதில்
    நம்பி வந்த என்னை ஏமாற்றி, திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி கொடுமைப்படுத்திய காதலன் அரவிந்துக்கு, நான் இறந்த பிறகு தக்க தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    மர்மம்

    மர்மம்

    இறந்த துணை நடிகையின் உறவினர்களிடம் பெரவள்ளூர் போலீஸார் விசாரணை நடத்திய போது அரவிந்த் மீது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. காதலியின் இறுதி ஊர்வலத்தில் காதலன் அரவிந்த் கலந்து கொண்டார். எனினும் யாஷிகா தற்கொலை சம்பவம் மர்மமாக உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+