Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் அறிய வேண்டிய பெரிய மாற்றம்.. கருணை அடிப்படை பணி நியமன விதி மாறியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டிருக்கிறது. என்ன திருத்தம் என்றால், காலிப் பணியிடங்களின் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்குள் பணி வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இது வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது, அரசுப் பணியில் இருக்கும்போதே காலமான அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவும் அருமையான திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ், இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தகுதியான நபருக்கு அரசு வேலை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறது.

Compassion as a Fundamental Duty Major Policy Change for TN Government Employees Families
ஒரு குடும்பத்தில் நிலையான வருமானம் ஈட்டுபவராக அரசு ஊழியர் இருந்திருப்பார். அவர் பணியில் இருக்கும் போதே இறந்து போனல், அவரது குடும்பம் வறிய நிலைக்கு தள்ளப்படும். ஒருவேளை ஏற்கனவே வறுமையில் இருந்தால், அந்தக் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே தான் அரசு அவர்களுக்கு உதவும் வகையில் கருணை அடிப்படையில் பணி வழங்குகிறது

கருணை அடிப்படையில் பணி: குடும்ப உறவில் யார் விண்ணப்பிக்கலாம்?

இறந்த அரசு ஊழியரின் மனைவி/கணவர் அல்லது அவரது மகன், மகள், தத்து மகன்/மகள், அல்லது உரிய விதிகளின்படி குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம். திருமணம் ஆகாதவர் என்றால், அண்ணன், தம்பி என யாராவது ஒரு குடும்ப உறுப்பினருக்கு கிடைக்கும்.

கல்வித் தகுதி என்ன

விண்ணப்பதாரரின் கல்வித் தகுதியின் அடிப்படையில் குரூப் C அல்லது குரூப் D பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் வழங்கப்படும். இறந்த ஊழியர் வகித்த பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை. அவர் என்ன வேலை பார்த்தாலும் குரூப் C அல்லது குரூப் D பிரிவுகளில் உள்ள அரசு பணிதான் வழங்கப்படும். கருணை அடிப்படையில் பணி என்பதால், அரசு அவர்களின் வாழ்வாதாரம் கருதி பணியினை வழங்குகிறது.

கருணை பணி நியமனம் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு

அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தள்ளது. அதேநேரம் வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பிப்பவரின் வயது குறைந்தபட்சம் 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்புகள் வயது வரம்பு நிர்ணய விதிகள் அடிப்படையில் உள்ளது. பொதுவாக, கணவன்/மனைவி அல்லது பெற்றோருக்கு 50 வயதும், மகன்/மகள்/சகோதரன்/சகோதரிக்கு 40 வயதும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் குடும்பத்தில் வேறு யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது என்பது முக்கியமான விதியாகும்.

புதிய விதி மாற்றம் என்ன

அதேநேரம் அரசு கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் தொடர்பான விதிகளில் தமிழ்நாடு அரசு சில திருத்தங்களை செய்திருக்கிறது. இதன்படி மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியல் என்பது இனிமேல், மாவட்ட வாரியாக இல்லாமல், மாநில அளவில் ஒரு பதிவு மூப்புப் பட்டியல் (seniority list) தயாரிக்கப்பட உள்ளது.அதேபோல் காலிப்பணியிடங்களின் அடிப்படையில், மூன்று ஆண்டுகளுக்குள் பணி நியமனம் வழங்கப்படும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் மாநில அளவில் மூப்பு பட்டியல் வெளியிட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. திருத்தம் செய்யப்பட்ட பணி நியமனம் ஆகஸ்ட்4ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+