"இவர்"தான் அடுத்த மேயரா.. சுற்றி சுற்றி வருகிறாராமே.. படுபிஸியில் உதயநிதி.. ஸ்டாலின் முடிவு என்ன?
சென்னையின் அடுத்த மேயர் பதவிக்கு பலரும் முயற்சித்து வருகிறார்களாம்
சென்னை: யார் அடுத்த மேயர் என்ற விவகாரம் சென்னையை இப்போதே ஆர்வத்துடன் சூழ்ந்து வருகிறது.. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் படுபிஸியாக இருக்கிறாராம்.. இதற்கு என்ன காரணம்? அப்படியானால் உதயநிதிதான் அடுத்த மேயரா என்ற பல சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
கொரோனா குறைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதேபோல, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித்தேர்தல் நடத்த சென்னை ஹைகோர்ட்டும் உத்தரவிட்டிருந்தது.
அந்த வகையில் சென்னையில் மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.. உலகிலுள்ள பழம்பெரும் மாநகராட்சிகளில் ஒன்றுதான் சென்னை மாநகராட்சி.. கடந்த 20 ஆண்டுகளில், மேயர் என்றாலே டக்கென நம் கண்முன் வந்து நிற்பது ஸ்டாலின் பெயர்தான்.. இதற்கு காரணம், மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை பெற்றவர் முக ஸ்டாலின்தான்.

சீர்திருத்தங்கள்
ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னைக்கு செய்த சீர்திருத்தங்கள் ஏராளம்.. அன்று மேயர் ஸ்டாலின் மட்டும் இல்லையென்றால், இன்று சென்னையில் இத்தனை பாலங்கள், மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், நடைபாதை அமைத்தல், சாலைப் பராமரிப்பு, பூங்காக்கள் அமைத்தல், கடற்கரை சீரமைப்பு இப்படி பல்வேறு பணிகள் நடந்திருக்காது.. ஆனால், அதோடு சரி.. இந்த 10 வருட ஆட்சியில், சென்னையை விரிவுபடுத்தும் எந்த திட்டமும் கையில் எடுக்கப்படவில்லை.

திமுக
இப்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.. மேயர் தேர்தலும் நடக்க போகிறது.. அடுத்த மேயராக பொறுப்பேற்பது யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது.. இந்த முக்கிய பொறுப்பை யாருக்கு வழங்குவது என்ற ஒருசில பெயர்களும் அடிபட்டது.. அந்த வகையில்தான் உதயநிதி பெயரும் சேர்த்தே கடந்த வாரம் அடிபட்டது.

குடியிருப்புகள்
காரணம், தன் தொகுதிக்குள் குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தெருக்கள், சந்துகள், குப்பை கூளங்கள் பகுதிகள் என மொத்த இடங்களுக்கும் நேரடியாகவே சென்று ஆய்வு செய்து வருவதால் அவரது செயல்பாடுகள் ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கின்றன.. எனவேதான் உதயநிதி பெயர் அடிபட்டது. இதனாலேயே யாரும் மேயர் பதவிக்கு முயற்சி செய்யாமல் இருந்தனர்..

சட்டமன்ற தேர்தல்
ஆனால், உதயநிதி ஸ்டாலினோ, மேயர் பதவியெல்லாம் தனக்கு வேண்டாம் என்பதால்தான், நேரடியாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் பதவியை நோக்கி தனது அரசியலை நகர்த்தி வருவதாக தெரிகிறது... உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியும், தன்னுடைய தொகுதியில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

மேயர் பதவி
இதையடுத்துதான், திமுகவில் உள்ள முக்கிய புள்ளிகள் பலரும் மேயர் பதவிக்கு குறி வைத்துள்ளனர்.. இதற்காக உதயநிதியிடமே காய்களை நகர்த்த தொடங்கிவிட்டார்களாம்.. அதுவும், நடந்து முடிந்த தேர்தலில் சென்னை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் திமுக வெற்றி பெற்ற நிலையில், திமுகவின் செல்வாக்கு பன்மடங்காக உயர்ந்துள்ளது.. இதனாலேயே, மேயர் பதவிக்கு குறி வைக்கும் பலரும் உதயநிதியை ரவுண்டு கட்டி வருகிறார்களாம்.

ஆவடி நாசர்
குறிப்பாக, முக்கிய புள்ளிகள் மற்றும் முக்கிய புள்ளிகளின் மகன்களே, இந்த மேயர் பதவிக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறதாம்.. சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, கேகே நகர் தனசேகரன், மறைந்த ஜே.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன், ஆவடி நாசர் மகன் ஆகியோர் முயற்சிப்பதாக தெரிகிறது.. இதில் சிற்றரசுவுக்குதான் நிறைய சான்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது.

சிற்றரசு
இதற்கு காரணம், ஜெ.அன்பழகன் இறந்ததும், சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக சிற்றரசுதான், சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.. உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதி, சிற்றரசுவின் மேற்கு மாவட்ட எல்லைக்குள்தான் உள்ளது... அதனால், உதயநிதி தொகுதிக்கு சென்றால் பெரும்பாலும் சிற்றரசுவின் மாவட்ட அலுவலகத்தில்தான் இருக்கிறார் என்கிறார்கள்..

அப்பாயிண்ட்மென்ட்
அதுமட்டுமல்ல, உதயநிதியின் அப்பாயின்மெண்ட்களை சமீபகாலமாக கவனிப்பதும் சிற்றரசுதானாம். நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதும் சிற்றரசுதானாம். உதயநிதிக்கு நெருக்கமாக இருப்பதால், ஒருவேளை சிற்றரசுவுக்குதான் சென்னை மேயர் வேட்பாளருக்கு வாய்ப்பு இருக்கும் என்ற பேச்சு பலமாக இருக்கிறது.

தனசேகரன்
அதேசமயம், இன்னொரு பலம் மிக்க வேட்பாளராக தனசேகரன் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். இவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட ஏற்கனவே வாய்ப்பு கேட்டார்.. ஆனால் தரவில்லை.. எனவே, இந்த வாய்ப்பு தருமாறு கேட்டு வருகிறாராம். இதைதவிர மேலும் பல திமுக வாரிசுகள் லிஸ்ட்டில் உள்ளனராம். இதில் யார் தேர்வாக போகிறார்கள்? உதயநிதி சிற்றரசுவுவை சிபாரிசு செய்வாரா? யார் பெயரை ஸ்டாலின் டிக் செய்ய போகிறார்? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications