நினைச்ச நேரம் எல்லாம்.. இப்போ ஏமாத்திட்டாரு! விஜய் டிவி நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பரபர புகார்!
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக பிரபலமான நாஞ்சில் விஜயன் மீதான புகார் தற்போது அதிர்வலை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு திருநங்கை அளித்த மனுவில், தன்னை நாஞ்சில் விஜயன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு பின்னர் என்னை ஏமாற்றிவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.
நாஞ்சில் விஜயன், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர். மேலும், சில திரைப்படங்களில் காமெடியனாகவும் நாஞ்சில் விஜயன் நடித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்த நிலையில், நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நாஞ்சில் விஜயன்
அதில், 15 ஆண்டுகளாக விஜய் டிவியில் பணியாற்றி வரும் ஒரு திருநங்கை, கடந்த 5 வருடங்களாக நாஞ்சில் விஜயனுடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், அவர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு தன்னை ஒதுக்கிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் அந்த திருநங்கை.
திருநங்கை புகார்
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த திருநங்கை, "நான் வில்லிவாக்கம் வீட்டில் தனியாகத்தான் வசித்து வந்தேன். அந்த வீட்டிற்கு நாஞ்சில் விஜயன் எப்போதும் வந்து செல்வார். நாங்கள் இருவரும் காதலிப்பது அவர்களுடைய குடும்பத்திற்கு நன்றாகவே தெரியும். அவருக்கு திருமணமாவதற்கு முன்பு வரை, அவரின் குடும்பத்தினர் என்னிடம் நன்றாகத்தான் பேசி வந்தார்கள். ஆனால், நாஞ்சில் விஜயனுக்கு திருமணமானதும், என்னிடம் யாருமே பேசுவது இல்லை. என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.
பாலியல் புகார்
திருமணமான பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். கடந்த ஆறு மாதத்துக்கு முன் நாங்கள் இருவரும் ரெசாட் போய் இருந்தோம். அதன் பின் திடீரென ஒரு நாள், வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது. குழந்தை இருக்கிறது. அதற்கு மேல் நாம் பழக வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால், நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நான் திருநங்கை என்பதை தெரிந்துதான், என்னை காதலித்தார். ஆனால், இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி ஒதுக்கும்போது மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக நானும் அவரும் பழகினோம். தன்னுடன் பழகிய அவர், பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார்" என கூறியுள்ளார்.
சென்னை காவல் துறை
இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் வகையில் சென்னை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் தனக்கும் அந்த திருநங்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது என விளக்கம் அளித்திருக்கிறார் நாஞ்சில் விஜயன். மேலும் புகார் கொடுத்து இருக்கும் திருநங்கையின் குற்றசாட்டுகள் பொய் எனவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சின்னத்திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications