தென்தமிழக வெள்ளம் போலவே கேரள வெள்ளத்தையும் கணிக்க தவறிய IMD
சென்னை: கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 270ஐ கடந்திருக்கும் நிலையில், ஐஎம்டி எச்சரித்ததை விட அதிக மழைப் பொழிவு இருந்ததாகவும், உண்மைகளுக்கு முரணான தகவலை மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளம் வந்த போது இதே குற்றச்சாட்டு ஐஎம்டி மீது வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதை aடுத்து மீட்பு பணிகள் அங்கு துரிதமாக நடைபெற்று வருகிறது. நிலச் சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 270 கடந்திருக்கிறது.

இந்த சம்பவம் இந்தியா முழுமைக்குமே சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதுகுறித்து முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்ததாக பேசினார் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா. மேலும்," வானிலை அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டும்" என காட்டமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் இந்திய வானிலை மையத்தின் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், அதாவது நூறு முதல் 200 மில்லி மீட்டர் மழை வரை மட்டுமே செய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், 48 மணி நேரத்தில் 572 மில்லி மீட்டர் மழை பெய்ததாகவும், ஆரம்பத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் மழைக்குப் பிறகு சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு சிறிய நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக பச்சை எச்சரிக்கையை மட்டுமே வெளியிட்டது என்றும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மீது குற்றச்சாட்டு எழுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் போதும், மூன்றாவது வாரத்தில் ஏற்பட்ட நெல்லை தென்காசி தூத்துக்குடி கனமழையின் போதும் இதே புகார் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த மாதத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்து உணவுக்காக கையேந்தும் நிலை கூட ஏற்பட்டது.
இது தொடர்பாக பேசி இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், டிசம்பர் 17, 18 தேதிகளில் கடுமையான மழை பெய்யும் என கூறியிருந்தது. ஆனால் கணித்த அளவைவிட பல மடங்கு அதிகமாக மழை பெய்தது எனவும் ஆய்வு மையத்தின் எச்சரிக்கை மிகத் தாமதமாகவே கிடைத்த.து இதன் காரணமாகவே பாதிப்பு ஏற்பட்டது என கூறியிருந்தார்.
மேலும் இந்திய வானிலை ஆய்வு மையக் கணிப்பு சரியான நேரத்திலும் துல்லியமாகவும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் குறுகிய காலத்தில் ரெட் ஆர்ட் கொடுக்கப்பட்டது என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியிருந்தார். இதே புகாரை தான் பல தரப்பினரும் அப்போது முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதே புகார் எழுந்திருப்பதை கவனிக்க வேண்டும்.
இந்திய ஆய்வு மையத்தை பொருத்தவரை உலகளாவிய முன்னறிவிப்பு அமைப்பு மாதிரி தான் பயன்படுத்தப்படுகிறது. இதில் துல்லியமாக தகவல்களை பெற முடியாது என்பது ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது. இதனால் துல்லியமாக வானிலை அறிவிப்புகளை வெளியிடும் வகையிலான ஏற்பாடுகளை வானிலை ஆய்வு மையம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications