கண்டக்டர், டிரைவர்களுக்கு தனி அறையில் உணவுக்கு நோ.. பயண வழி உணவகங்களுக்கு பறந்த உத்தரவு..ஏன்?
தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டலில் ஓட்டுநர், நடத்துனருக்கு தனி அறையில் உணவு தரக்கூடாது என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
சென்னை: தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டலில் ஓட்டுனர், நடத்துனருக்கு தனி அறையில் உணவு தரக்கூடாது என்றும் பயணிகளுக்கு வழங்கும் அறையிலேயே ஓட்டுநர், நடத்துநருக்கு உணவு வழங்கலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தொலைதூர பகுதிகளுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, போன்ற தென் மாவட்டங்களுக்கு கோவை, சேலம், திருப்பூர் என தொலை தூர பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் நீண்ட தூரம் பயணிப்பதால் பயணத்திற்கு இடையே தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக உள்ள பயண வழி உணவகங்களில் நிறுத்தப்படும்.

பயணவழி உணவகங்கள்
குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் விக்கிரவாண்டியில் உள்ள பயண வழி உணவகங்களில் நிறுத்தப்படுகின்றது. இந்த உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுகள், எம்.ஆர்.பி விலையை விட அதிக விலைக்கு பிஸ்கட்கள் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்கப்படுவதாகவும் பயணிகள் தரப்பில் அவ்வப்போது குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இதையடுத்து, பயணவழி உணவகங்களுக்கு சுகாதாரமாண உணவு வழங்க வேண்டும், பயணிகளுக்கு இலவச கழிப்பறை வசதி செய்து இருக்க வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக போக்குவரத்துத் துறை விதித்து இருந்தது.

தரமற்ற உணவு, கூடுதல் விலை
அவ்வப்போது விதி மீறும் சில பயணவழி உணவகங்கள் மீது கடும் நடவடிக்கையும் போக்குவரத்து துறை எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் கூட விக்கிரவாண்டியில் உள்ள வேல்ஸ் உணவகத்தில் உணவுப் பொருட்கள் இரு மடங்கு விலையில் விற்கப்படுவதாகவும் தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆய்வு செய்த போக்குவரத்து துறை அதிகாரிகள், விக்கிரவாண்டி அருகே சாலைகள் இருபுறமும் உள்ள வேல்ஸ் உணவகம் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் வழங்கியதை கண்டறியப்பட்டதன் அடிப்படையில், வேல்ஸ் உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு
போக்குவரத்து துறை ஒருபக்கம் நடவடிக்கை எடுத்தாலும் பயண வழி உணவகங்களில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் கழிவறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுவதில்லை போன்ற குற்றச்சாட்டுக்கள் பயணிகள் தரப்பில் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது. பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் இரு மடங்காக விற்பனை செய்யப்படுவதாகவும் உணவுப்பட்டியல்களின் விலையை பயணிகள் தெரிந்து கொள்ளவேண்டும் வகையில் வைக்க வேண்டும் என்ற விதிகளை சில உணவகங்கள் பின்பற்றுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தனி அறையில் உணவு தரக்கூடாது
அதேபோல், பயண வழி உணவகங்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தனி அறையில் உணவு வழங்கப்படுகிறது. பெரும்பாலான உணவகங்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது. பேருந்து நடத்துனர்கள் ஓட்டுநர்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கப்படுவதாகவும் அதற்கான பில்லையும் நமது தலையிலேயே சேர்த்து கட்டிவிடுகிறார்கள் என்று பயணிகளின் குமுறலாக உள்ளது. இந்த நிலையில், தொலைதூர பேருந்துகள் நிறுத்தப்படும் ஓட்டலில் ஓட்டுநர், நடத்துனருக்கு தனி அறையில் உணவு தரக்கூடாது என்றும் பயணிகளுக்கு வழங்கும் அறையிலேயே ஓட்டுநர், நடத்துநருக்கு உணவு வழங்கலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications