மன்மோகன்சிங்குக்கு 'நோ' ராஜ்யசபா சீட் ... காங். கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்
Recommended Video
சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட் கேட்ட காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ராஜ்யசபா தேர்தலுக்காக 2 திமுக வேட்பாளர்களை இன்று அறிவித்த ஸ்டாலின் மதிமுகவுக்கு 1 இடம் என அறிவித்து காங்கிரஸுக்கு கதவை சாத்திவிட்டார்.
லோக்சபா தேர்தலின் போது திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தனை தொகுதிகளை திமுக ஒதுக்கியதே சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை கேட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் என கூறப்பட்டது.
மேலும் மதிமுகவுக்கு 1 ராஜ்யசபா சீட் என லோக்சபா தேர்தல் உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தான போதே இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற இயலவில்லை.

திமுகவிடம் உதவி கேட்ட காங்.
ஆனால் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது, இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்ப திமுகவின் உதவியை காங்கிரஸ் மேலிடம் கோரியிருந்தது.

ஜகா வாங்கிய திமுக
தொடக்கத்தில் திமுக தலைமை இதற்கு ஒப்புக் கொண்டது. ஆனால் ஒரு கட்டத்தில் திடீரென திமுக தலைமை பின்வாங்க தொடங்கியது. பின்னர் டெல்லியில் காங்கிரஸ் மேலிடத்துடன் டி.ஆர். பாலு பேச்சுவார்த்தை நடத்திய போதும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

2 வேட்பாளர்கள் அறிவிப்பு
இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின், மன்மோகன்சிங்குக்கு சீட் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று திமுகவின் 2 ராஜ்யசபா வேட்பாளர்களை ஸ்டாலின் அறிவித்தார். மேலும் மத்இமுகவுக்ககு 1 இடம் என்பதையும் ஸ்டாலின் உறுதி செய்தார்.

காங்கிரஸுக்கு கதவு மூடல்
இதன் மூலம் காங்கிரஸின் மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்டாலின் முற்றாக நிராகரித்துவிட்டார். ஏற்கனவே கராத்தே தியாகராஜன் கொளுத்தி போட்ட நெருப்பால் திமுக- காங்கிரஸ் கூட்டணி இடையே கொந்தளிப்பு உள்ள நிலையில் ஸ்டாலினின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
-
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications