காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்!
சென்னை: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நீடித்து வரும் சூழலில், மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள மாணிக்கம் தாகூர், அதற்கான கடிதத்தை மல்லிகார்ஜுன கார்கேவிடம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 22 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர்கள் பட்டியலையே வெளியிடாமல் இருக்கிறது. செல்வப்பெருந்தகை மற்றும் கிரிஷ் சோடங்கர் இருவரும் தேர்வு செய்த வேட்பாளர்கள் பட்டியலுக்கு காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் 6ஆம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஏப்ரல் 5ஆம் தேதி வரை காங்கிரஸ் கட்சி தங்களின் வேட்பாளர்களை இறுதி காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, காங்கிரஸ் கட்சியில் பணத்திற்காக எம்எல்ஏ சீட் கொடுப்பதாக விமர்சித்திருந்தார்.
இதனால் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற மையக் குழு கூட்டத்தில் அதிரி புதிரியானது. இதன்பின் ராகுல் காந்தி புதிய வேட்பாளர்கள் பட்டியலை உருவாக்க அறிவுறுத்தினார். அதேபோல் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியாக திமுகவை சாடி வந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட திமுகவை விமர்சித்தது பேசுபொருளானது.
இந்த நிலையில் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகி இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள மாணிக்கம் தாகூர், அதற்கான கடிதத்தை மல்லிகார்ஜுன கார்கேவிடம் கொடுத்திருக்கிறார். மாணிக்கம் தாகூரின் ராஜினாமாவிற்கு வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் குழப்பமும் காரணமாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்கள் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரி செய்யும் பணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியொரு சூழலில் மாணிக்கம் தாகூர் பதவி விலகி இருப்பது விவாதமாகி இருக்கிறது. அதேபோல் மாணிக்கம் தாகூர் பதவி விலகலை திமுகவினர் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications