கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த காங்கிரஸ்! திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு
சென்னை: திமுக -காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழுவை அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சி மேலிடம். கூட்டணி தொடர்பாக நீடித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ப சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே தகிக்க ஆரம்பித்துவிட்டது. சட்டமன்ற தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவும் இடம் பெற்றுள்ளது. வலுவான கூட்டணி அதிமுக தலைமையில் அமைக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இதனால், இந்த இரு கூட்டணியிலும் மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, தவெகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே அரசியல் வட்டாரத்தில் அரசல்புரசலாக பேச்சு எழுந்து வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யுடன் ராகுல் காந்தி பேசி ஆறுதல் கூறியதாக சொல்லப்பட்ட நிலையில், சமீபத்தில் ஒருமுறை ராகுல் காந்தி விஜய்யுடன் பேசியதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
பீகாரில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த நிலையில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் அதிக இடம் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் இந்த முறை தங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.
விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒரு சிலர் டெல்லி தலைமையிடம் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. விஜய்க்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, புதுவையிலும் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். எனவே, தவெக கூட்டணி வைத்தால், கேரள தேர்தலிலும் நமக்கு சாதகமாக இருக்கும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மேலிடத்திடம் கூறியதாகவும் இந்த கருத்தை காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவர்கள் சிலரும் ஏற்றுக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது.
ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருக்கும் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பனையூர் வந்து விஜயை சந்தித்து பேசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதேபோன்று ராகுல் காந்தியும் நடிகர் விஜய்யுடன் 2 முறை தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. எனினும்,காங்கிரஸ் நம்மை விட்டு விலகாது என்று திமுக தலைவர்கள் கூறி வந்தனர்.
இவ்வாறாக கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரத்தில் காங்கிரஸ் கூட்டணி மாறுமா? என்பது தொடர்பான விவாதம் எழுந்த நிலையில், இன்று அத்தகைய பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை அமைந்துள்ளது. அதாவது திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக குழு ஒன்றை காங்கிரஸ் அமைத்துள்ளது.
அந்தக் குழுவில், செல்வப் பெருந்தகை, சூரஜ் எம்.என் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டணி தொடர்பான விவாதங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறிய நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
"தமிழ்நாடு சட்டசபை தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு' வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்











Click it and Unblock the Notifications