உதயநிதி, பினராயி விஜயனை திட்டி தீர்க்கும் காங்கிரஸ்! ‛இந்தியா’ கூட்டணியில் பூகம்பம்.. மேட்டர் என்ன?
சென்னை: லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி கட்சிக்குள் புகைச்சல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதற்கு முக்கிய காரணமாக காங்கிரஸ் இருக்கிறது என்பதுதான் பெரும் முரணானதாக இருக்கிறது.
வேலையின்மை, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம், மணிப்பூர் கலவரம், சிஏஏ, ராமர் கோயில், பெட்ரோல், டீசல் விலையுயர்வு, ஜஎஸ்டி, தேர்தல் பத்திரம் இப்படி பல பஞ்சாயத்துக்கு நடுவில்தான் லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட விஷயங்களில் மத்திய அரசின் மீது உள்ள அதிருப்பதியை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. இந்த முறையும் கோட்டை விட்டு விட்டால் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுப்பதே பெரும் சவாலான விஷயமாகிவிடும் என்று கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

குறிப்பாக மாநில கட்சிகளை ஒன்றிணைத்தது காங்கிரசுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என்று சொல்லப்பட்டது. இந்தியா கூட்டணி என்கிற பெயரில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வந்து இந்த தேர்தலை காங்கிரஸ் எதிர் கொண்டிருக்கிறது.
நேற்று நாடு முழுவதும் 102 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், தற்போது கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் புகைச்சலை கிளப்பி வருகிறது. என்னதான் தேசிய அளவில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தாலும், மாநிலங்கள் என்று வரும்போது தங்களுடைய வாக்கு வங்கியை மாநில கட்சிகள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் தனித்தே களம் காண்கின்றன. இப்படி இருக்கையில், கேரள முதலமைச்சர் குறித்து ராகுல் காந்தி விமர்சித்து பேசிய விஷயங்கள் இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட ராகுல் காந்தி, “இரண்டு மாநில முதல்வர்கள் (ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால்) அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொண்டு மத்திய பாஜக அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என்னிடம் கூட அமலாக்கத் துறையினர் 55 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். எனது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மீதும் அமலாக்கத் துறை வழக்கு உள்ளது. ஆனால், அவர் இதுவரை வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படவில்லை, சிறைக்கும் செல்லவில்லை. நான் பாஜகவை 24 மணி நேரமும் விமர்சிக்கிறேன். ஆனால், கேரள முதல்வர் என்னை மட்டும் விமர்சிக்கிறார். பாஜகவை அதிகம் விமர்சிப்பதில்லை. இதில் ஏதோ புதிர் உள்ளது" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த பினராயி விஜயன், "உங்களின் பாட்டி இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தி ஏராளமான இடதுசாரி தலைவர்களை சிறையில் தள்ளினார். அப்போது நானும் கூட சிறையில் அடைக்கப்பட்டேன். நாங்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தோம். ஏராளமான விசாரணைகளை எதிர்கொண்டுள்ளோம். எனவே, வழக்கு விசாரணைக்கும், சிறைக்குச் செல்லவும் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. ஆகவே விசாரணை, ஜெயில் போன்றவற்றின் மூலம் எங்களை மிரட்ட முடியாது. நாங்கள் அதுபற்றி கவலைப்படுவதில்லை.
ஆனால், காங்கிரஸ் தலைவர்களுக்குதான் சிறைக்குச் செல்வதற்கு அச்சம் உள்ளது. எனவே, அவர்கள் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து சொகுசாக வாழ்ந்துவிட்டார்கள். காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண், சிறைக்கு செல்ல அஞ்சிதான் கட்சி மாறியதாக கண்ணீர் விட்டு அழுதார் என ராகுலே கூறியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் தலைவர்களுக்கு சிறை என்றால் எவ்வளவு பயம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்" என்று காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.
அதேபோல, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தமிழக அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதாவது, "உதயநிதி ஸ்டாலினின் கருத்து தவறானது; அது அவருடைய சிந்தனை, சனாதனம் குறித்த கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார். இப்போதுதான் முதற்கட்ட தேர்தலே முடிந்திருக்கிறது. இன்னும் 441 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டி இருக்கிறது. அதற்குள் கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் விமர்சிக்க தொடங்கியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
கடந்த 2004 பொதுத் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் இடதுசாரிகளின் ஆதரவுடன் கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டது. அப்போது இடதுசாரிகளுடன் கொஞ்சிய காங்கிரஸ், பின்னாட்களில் பல்வேறு மசோதாக்களை கூட்டணி கட்சியின் ஆலோசனையின்றி அறிமுகப்படுத்த தொடங்கியது. அதில் முக்கியமானதுதான் அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம். இது குறித்து இடதுசாரிகளின் ஆலோசனையின்றி காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவெடுத்தது.
விளைவு, ஐமுகூ அரசுக்கு அளித்த ஆதரவை இடதுசாரிகள் கடந்த 2008ம் ஆண்டு விலக்கிக்கொண்டனர். மட்டுமல்லாது, காங்கிரஸின் நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டத்தையும் நடத்தினர்.
தற்போது இதேபோன்ற சூழல் மீண்டும் திரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதாவது, கூட்டணிக்காக இனிக்க இனிக்க பேசிவிட்டு, மறுபுறம் தன்னுடைய நலனை மட்டுமே காங்கிரஸ் மையப்படுத்தி செயல்படுகிறது. அதனுடைய வெளிப்பாடுதான் யாரை எதிர்க்கிறோம் என்று தெரியாமல், பிரனாயி விஜயனையும், உதயநிதி ஸ்டாலினையும் விமர்சித்து பேசியிருப்பது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications