அமித்ஷாவின் துணை அலுவலகம் அதிமுக.. ரூட்டை மாற்றி எடப்பாடியை அட்டாக் செய்த மாணிக்கம் தாகூர்
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்கின்றன. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தவெகவில் இணைய விருப்பம் தெரிவிப்பதாக தகவல் வெளியானது. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சொன்ன கருத்து திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் திடீரென மாணிக்கம் தாகூர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக - பாஜக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்தார். பிறகு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு இறுதி செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. மறுபக்கம் திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. காங்கிரஸ் தவெக பக்கம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸ் தரப்பிலான பாமகவும் திமுகவில் இணைவதற்கு ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விசிகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திவால்தனத்தின் ஒப்புதலா..
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து கூறி வருகிறார்கள். அதில் முக்கியமானவர் மாணிக்கம் தாகூர். அவர் ஐடிபிஎஸ் சர்வே முடிவுகளை மேற்கோள்காட்டி, தவெக விஜய்க்கு ஆதரவு அதிகரிப்பதையும், தமிழ்நாட்டில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், விருதுநகர் தொகுதி எம்பியுமான மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் காலத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி போன்ற மத்திய அமைப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக சுட்டிக்காட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையாக இருந்தால், இது நியாயமான அரசியலா அல்லது அரசியல் திவால்தனத்தின் ஒப்புதலா.
அமித்ஷாவின் அடிமை பழனிசாமி
தேர்தல் என்பது மக்களின் நம்பிக்கை, கொள்கைகள், செயல்பாடுகள் கொண்டு நடத்தப்பட வேண்டியது. மத்திய அமைப்புகளை அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி துணையாக நாடுவது அச்சுறுத்தலின் மூலம் தேர்தலை மாற்றும் முயற்சி தான். சட்டத்தை அமல்படுத்துவது ஒன்று; அதே அமைப்புகளை தேர்தல் ஆயுதமாக பயன்படுத்துவது முற்றிலும் வேறு.
ஒருகாலத்தில் தனித்த அடையாளம் கொண்டிருந்த அதிமுக இன்று முழுமையாக அமித் ஷாவின் அதிமுக இயந்திரத்தின் துணை அலுவலகமாக மாறியுள்ளது.
என்ன ஒரு வீழ்ச்சி. தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமெனில், இந்த அச்ச அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டை காப்பாற்ற அமித்ஷாவின் அடிமை பழனிசாமி தோற்கடிக்கப்பட வேண்டும்." என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications