Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பைக்கில் பெட்ரோல் டேங்க்கை நிரப்ப சொன்னேனே.. இப்ப புரியுதா".. டெல்லியில் கொந்தளித்த ராகுல் காந்தி

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து எகிறி வரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து தேசிய அளவில், காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த 22 ஆம் தேதியில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது... தொடர்ந்து இன்றும் 10வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.

இன்றும் புதிய உச்சம்

இன்றும் புதிய உச்சம்

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.107.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.97.52-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05, டீசல் விலை ரூ.6.09 உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது... கடந்த ஒரு வார காலமாகவே எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை கையில் எடுத்து வருகின்றன. விலை உயர்வு குறித்து,. மத்திய அரசையும் கண்டித்து வருகின்றன.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நேற்று முன்தினம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏன் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு விளக்கம் தந்திருந்தார்.. அதில் காங்கிரஸ் கட்சி மீது குற்றமும் சாட்டியிருந்தார்.. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க, தொடர்ந்து செலவிட வேண்டி உள்ளதால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றும், ரஷ்யா- உக்ரைன் போர் நீண்ட நாட்களாக நடந்தாலும், இந்தியாவில் தற்போது தான் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது என்பது முற்றிலும் உண்மையல்ல என்றும் கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

10 வருடங்களுக்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூபாய் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டது, அந்த கடனைத் திரும்ப செலுத்துவதற்காகதான், மக்கள் இப்போதும் பணம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நிதியமைச்சர் கூறியிருந்தார். இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விலைவாசி இல்லாத பாரதம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு செல்லும் ராஜபாதையில் அமைந்துள்ள விஜய் சௌக் சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.. காங்கிரஸின் ராகுல்காந்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் செளத்ரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக கண்டன குரல்களையும் எழுப்பினர்.. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மட்டுமின்றி சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராகவும் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

தமிழகம்

தமிழகம்

இதன் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 2 முதல் 4 வரை தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் பொதுமக்களை திரட்டி பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார். அதேபோல, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

ஒரே கோரிக்கை

ஒரே கோரிக்கை

அப்போது பேசிய ராகுல்காந்தி, "எங்கள் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்... மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்து கட்டுக்குள் வைக்க வேண்டும்... பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இப்போதுபெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் இந்த அரசு பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து கொண்டிருக்கிறது..

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. நான் தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று சொல்லியிருந்தேன்.. அதுதான் இன்று நடந்துள்ளது.. வாகன ஓட்டிகள் பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்பி வைக்கும்படி அப்பவே சொல்லியிருந்தேன்" என்றார்.

மாலை அணிவித்தார்

மாலை அணிவித்தார்

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் நடக்கிறது.. கடந்த 10 நாட்களில் 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து ராகுல் காந்தி, சிலிண்டர் மற்றும் பைக் ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+