பதவிக்காக பாஜகவை தூக்கிப் பிடிக்கிறார் அண்ணாமலை.. படிப்பதை கெடுக்கும் ஆர்எஸ்எஸ்.. காங்கிரஸ் விளாசல்!
மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பதவிக்காக பாஜகவை தூக்கிப் பிடிக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. அணியின் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மாணவர்கள் படிப்பதையோ, மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டையோ நிறுத்த முடியாத காரணத்தால் தற்கொலைக்கு தூண்டிவிடும் விதமாக ஆர்எஸ்எஸ், பாஜக செயல்பட்டு வருவதாக ரஞ்சன் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐஐடிக்களில் தொடரும் தற்கொலைகளை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. அணியின் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான மும்பை, சென்னை ஐஐடி-களில் தொடரும் மாணவர்கள் தற்கொலை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பட்டியலின பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் சென்னை ஐஐடி வளாகத்தின் முன்பு தீப்பந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தீப்பந்தம் கொளுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தூண்டுதல்
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி அணி தலைவர் ரஞ்சன் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வஞ்சித்து, உயர் சாதி சமூகத்தினர் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் தவறுதலான தூண்டுதல்களால் பல்வேறு செயல்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2021 வரை நாடாளுமன்ற அறிக்கையின்படி 122 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் 72 மாணவர்கள் பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள்.

இட ஒதுக்கீட்டை நிறுத்த முடியாமல்
அரசியலமைப்பு சட்டத்தின் உரிமைகளைப் பயன்படுத்தி பட்டியலின மக்கள் கஷ்டப்பட்டு படித்து வரும் நிலையில், இது போன்ற வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மாணவர்கள் படிப்பதையோ மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறுத்த முடியாத காரணத்தால் தற்கொலைக்கு தூண்டிவிடும் விதமாக ஆர்எஸ்எஸ், பாஜக செயல்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான அரசு இதனை நிறுத்த வேண்டும், வருங்காலங்களில் இதுபோன்ற செயல் நடைபெறாமல் இருக்கவும் மக்களின் விழிப்புணர்வுக்காகவும் தற்போது தீப்பந்தம் ஏந்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக போராடி வருகிறோம்.

பதவிக்காக
2024ல் ராகுல் காந்தி தலைமையில் அமையப்போகும் காங்கிரஸ் ஆட்சியில் இதற்கு நிரந்தர தீர்வு காண்போம். அனைத்து துறைகளிலும் மோடி அரசால் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது. மாணவர்களிடம் வன்முறையைத் தூண்டி தவறான எண்ணத்தை விதைக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பதவிக்காக பாஜகவை தூக்கிப் பிடிக்கிறார்" எனத் தெரிவித்தார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications