விஜயுடன் கூட்டணி வைக்கலாமே.. தவெக பற்றி பேச்சு வந்ததும்.. ராகுல் தந்த ரியாக்சன்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர்-அரசியல்வாதியான விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) எந்தவித தேர்தல் கூட்டணியும் இல்லை என காங்கிரஸ் தலைமை ஒரு திட்டவட்டமான முடிவை உறுதியாக எடுத்துள்ளதாக கூறப்டுகிறது. மாறாக, திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிப்பதாக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

விஜயின் தவெக பற்றிய பேச்சு வந்த போது.. ராகுல் காந்தி அந்த உரையாடலில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

congress

டெல்லியில் உள்ள கட்சி தேசியத் தலைமை அலுவலகமான இந்திரா பவனில், தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த நான்கரை மணி நேர முக்கிய உத்திக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் முடிவு எடுத்துள்ளதாக நம்பகமான தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் பதற்றம் ஏற்பட்டால் காங்கிரஸ் மாற்று வழிகளை நாடக்கூடும் என்ற அண்மைய பேச்சுக்களுக்கு மத்தியில் இந்த முடிவு வந்துள்ளது. காங்கிரஸ் தலைமை திமுகவுடனான கூட்டணியே தங்கள் விருப்பமான அரசியல் பாதை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

விஜய் பற்றிய பேச்சு வந்த போது.. ராகுல் காந்தி அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. விஜயுடன் கூட்டணி வேண்டுமென்றால் இயல்பாக இருக்கலாம்.. ஆனால் அது வெற்றி கூட்டணியாக இருக்க வாய்ப்புகள் இல்லை என்று ராகுல் காந்தி கூறியதாக தெரிகிறது.

அதே சமயம் திமுக ஆட்சியில் அமைச்சர் பதவிகள் கோரும் விவகாரத்தில் காங்கிரஸ் ஒரு தெளிவான மற்றும் நிதானமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 2026 தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையைப் பெறத் தவறினால் மட்டுமே அமைச்சர் பதவிகளைக் கோரும். இல்லையெனில், அதிகாரப் பகிர்வை வலியுறுத்தாமல் திமுக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க காங்கிரஸ் தயாராக உள்ளது.

திமுக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு

கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னரே பொதுவெளியில் தெளிவாகத் தெரிவித்திருந்த கருத்துக்களைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினின் அந்தக் கருத்துகள் கூட்டணிக்குள் நிச்சயமற்ற தன்மையை மேலும் அதிகரித்திருந்தன.

கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "சமத்துவம், சமூக நீதி, அதிகாரம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை மட்டுமே தமிழ்நாடு தேர்ந்தெடுக்கும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. ஆர்எஸ்எஸ்-பாஜக அரசியலுக்கு எதிராக இழந்தவற்றை மீட்டெடுப்பதில் கட்சி முக்கியப் பங்காற்றும்" எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸின் இந்த உள் விவாதங்களுக்கும் முடிவுகளுக்கும் எதிர்க்கட்சியான அதிமுக இடமிருந்து கடும் எதிர்வினை உடனடியாக ஏற்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக தலைமையிலான கூட்டணி "சரிவின் விளிம்பை நெருங்குவது போல் தெரிகிறது" என்று கிண்டலாகக் கருத்துத் தெரிவித்தார்.

சுருங்கச் சொன்னால், காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணிக்கு கதவடைத்துவிட்டது. திமுகவுடனான தங்கள் அரசியல் கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் மற்ற அரசியல் வியூகங்களுக்கும் காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+