காங்கிரஸில் மீண்டும் வெடித்த கோஷ்டி பூசல்.. 300 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா.. பின்னணி என்ன?
சென்னை : தமிழக காங்கிரஸ் கமிட்டியில், மீண்டும் கோஷ்டி பூசல்கள் கடுமையாக எழுந்துள்ளன. தலைமையின் அறிவிப்புக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர் ரஞ்சன் குமார் காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் குமார் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் எஸ்.சி பிரிவு நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் தமிழக காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்.சி பிரிவு தலைவர்
தமிழக காங்கிரஸ் கட்சியில் எஸ்.சி பிரிவு தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ இருந்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்து வந்த செல்வப்பெருந்தகையின் பதவிக்காலம் முடிவடைந்து விட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.ஆழகிரியின் ஆதரவாளரான ரஞ்சன்குமார் தமிழக காங்கிரஸ் எஸ்.சி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5ஆம் தேதி சோனியா காந்தி ரஞ்சன் குமாரை எஸ்.பி பிரிவு தலைவராக நியமித்தார்.

கூண்டோடு ராஜினாமா
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர் ரஞ்சன் குமார் தமிழக காங்கிரஸின் எஸ்.சி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்.சி பிரிவில் பொறுப்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

அனைத்து நிர்வாகிகளும்
தமிழ்நாடு காங்கிரஸில் மாநில எஸ்.சி பிரிவு தலைவர் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ் எஸ்.சி பிரிவின் துணைத் தலைவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட எஸ்.சி பிரிவு தலைவர்கள் என்று 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் தமிழக காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சோனியாவுக்கு கடிதம்
இதுகுறித்து எஸ்.சி பிரிவு நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் எஸ்.சி பிரிவில் கடந்த எட்டு ஆண்டுகளாக உழைத்தவர்களை மாநில தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யாமல் தங்களை புறக்கணித்து விட்டதாகவும், இது நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும், இது இளம் தொண்டர்கள் கட்சியில் இருந்து விலகி மற்ற கட்சிகளில் சேர வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சனாதனம்
மேலும், "காங்கிரஸ் கட்சியில் எஸ்.சி பிரிவு வளர்வதற்கு இங்குள்ள சனாதனவாதிகள் விரும்பவில்லை. இவர்கள் பட்டியலின அணியை பொம்மை போல் பயன்படுத்த நினைக்கின்றனர். பட்டியலின பிரிவை நன்றாகச் செயல்பட விடாமல் தடுப்பதற்காகவே இப்படி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சன் குமார் நியமனத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்." என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications