விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்!
சென்னை: திமுக கூட்டணியில் தமிழக காங்கிரசுக்கு 28 சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த 28 தொகுதிகள் என்னென்ன? என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் ஓரிரு நாளில் இதற்கு தீர்வு காணப்படும் என்கிறார்கள்.
இந்த நிலையில், 28 சீட்டுக்களில், தற்போதைய சிட்டிங் தொகுதிகள் 17 இடங்களையும் அப்படியே கொத்தாக வாங்க வேண்டும் என காங்கிரசின் 17 எம்.எல்.ஏ.க்களும் செல்வப் பெருந்தகையிடம் வலிடயிறுத்தி வருகின்றனர்.

செல்வப் பெருந்தகையோ, "நிறைய தொகுதிகளை திமுக மாத்திக் கொடுக்கிறது. சிட்டிங் தொகுதிகள் முழுவதையும் திமுக கொடுக்காது" என்று சொல்லியிருக்கிறார்.
அதேசமயம், செல்வப் பெருந்தகைக்கு வலது கரமாக இயங்கும் ஒரு டீம், சிட்டிங் எம்.எல்.ஏ. க்கள் பலரிடமும், உங்க தொகுதியை திமுகவிடம் கேட்டு வாங்க வேண்டுமானால் கவனிக்க வேண்டியதிருக்கும்" என்று சொல்லி கோடிகளில் ஒரு தொகையை சொல்கின்றனர்.
அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள். இதற்கிடையே, 28 சீட்டுகளை காங்கிரஸ் கை வாசம் வைத்திருப்பதால் சிட்டிங் எம். எல். ஏ. க்கள் தவிர்த்து கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் பலரும் செல்வப் பெருந்தகையிடம் நட்பு பாராட்டி வருகின்றனர்.
அவர்களிடமும், செல்வப் பெருந்தகையின் டீம் பெரிய அளவில் டீல் பேசி வருகிறது. இதனால் காங்கிரசில் ஒரே கொந்தளிப்பாக இருக்கிறது. இந்த நிலையில், சீட்டுகள் பல கோடிகளுக்கு விலை பேசி விற்கப்படுவதாக கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் ராகுல்காந்திக்கு புகார்களை தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் லிஸ்ட் வெளியாகும் போது, இந்த டீல் விவகாரம் பகிரங்கமாக வெடிக்கும் என்கிறார்கள் கதர்ச் சட்டையினர்.
- சிறப்பு நிருபர் எழில்
-
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications