எதிர்காலத்தில் தமிழகத்தில் காங். 200 தொகுதிகளிலும் போட்டியிடலாம்: கே.எஸ். அழகிரி
சென்னை: எதிர்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளிலும் கூட போட்டியிடலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது

இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கையெழுத்திட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ். அழகிரி பேசியதாவது:
தி.மு.க.வுடனான தொகுதி உடன்பாடு மகிழ்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மதச்சார்பின்மை வெற்றிபெற வேண்டும் என்பதற்காக செயல்படுகிறோம். சமூகநீதிக்கு எதிரான சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு.
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நோயாக பாஜக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டும்தான். தமிழக சட்டசபை தேர்தலில் வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம். அதற்கான காலமும் வரும். இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications