மெட்ரோ ரயிலில் உணவு சாப்பிட தடை.. விதிகளை பின்பற்றுங்கள்.. சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் உணவு உட்கொள்ள பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமூகமான இனிமையான பயணத்தை உறுதி செய்ய விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் குடியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலும் ஒரு பக்கம் அதிகரிக்க, காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்கு சென்று வருவோர் திண்டாடி வருகின்றனர்.

இதனால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையின் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பான மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணத்தை உறுதி செய்வதால், நீண்ட தூரம் பயணிப்பவர்கள் அனைவரும் மெட்ரோ பக்கம் திரும்பி வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் மெட்ரோ ரயிலை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 10.52 கோடியாகும். கடந்த ஆண்டை விடவும் சுமார் 1 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கை இது. இதனால் எதிர்காலத்திலும் மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், மெட்ரோ பயணிகளுக்கு ஒரு நினைவூட்டல்.. இனி சென்னை மெட்ரோ ரயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி கிடையாது. அனைத்து பயணிகளுக்கும் சுமூகமான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்வதற்கு, விதிமுறைகளை பின்பற்றவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
A gentle reminder for metro riders: Please follow metro etiquettes to ensure a smooth and pleasant journey for all passengers.#chennaimetro #cmrl #publictransport #commute #travel #metrorail #chennai #metroride #journey pic.twitter.com/K1E1ltKxtN
— Chennai Metro Rail (@cmrlofficial) January 20, 2025
அவசர அவசரமாக பணிக்கு செல்வோர், பள்ளிகளுக்கு செல்வோர் என்று பலரும் டிபன் பாக்ஸில் உணவு எடுத்து கொண்டு பயணத்தின் போது சாப்பிடுவது வழக்கமான விஷயம் தான். ஆனால் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு பின் என்ன காரணம் என்றும் பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் இந்த அறிவிப்பு பயணிகளிடையே சொல்லப்பட்டு வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications