1000 ரூபாய் இருந்தா ’அது’ சின்னமலை ரெட் லைட் போர்ட்! வார்னிங் கொடுத்த சென்னை போலீஸ்! அலர்ட் ஆன ஓனர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி போல சென்னை சின்னமலை பகுதியில் விடுதி ஒன்றில் ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என டிஜிட்டல் விளம்பர போர்டு வைக்கப்பட்டிருந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காவல்துறையினரின் எச்சரிக்கையை அடுத்து அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

உலக நாடுகள் பலவற்றில் பாலியல் தொழில் என்பது அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை அது இன்னமும் குற்றமாகவே பார்க்கப்படுகிறது. பல மாநிலங்களில் தற்போது வரை அந்த தடை அமலில் இருக்கிறது.

அதே நேரத்தில் மும்பை காமாத்திபுரா பகுதியில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ரெட்லைட் ஏரியா என குறிப்பிடப்பட்டுள்ள இங்கு பெண்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் தற்போது வரை நடக்கிறது.

பாலியல் தொழில்

பாலியல் தொழில்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவ வீரர்களின் பாலியல் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட அந்த ரெட் லைட் ஏரியாவில் சுதந்திரத்திற்கு பிறகும் தற்போது வரை அங்கு பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாலியல் தொழிலுக்கு தடை இருக்கும் நிலையில் சென்னையில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களை உலுக்கி இருக்கிறது. சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் நூற்றுக்கணக்கான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

ரெட் லைட் விளம்பரம்

ரெட் லைட் விளம்பரம்

இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வேலை நிமித்தமாக வந்துள்ளவர்கள் தங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் என்ஜிஆர் காலனி பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே 'ஹோட்டல் நான்வெஜ்' என்ற பெயரில் தங்கும் விடுதி ஒன்று கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வந்திருக்கிறது. அங்கு தான் இந்த அதிர்ச்சி தரும் புகைப்படமானது எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த தனியார் தங்கும் விடுதியில் முகப்பில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் விளம்பரப் பலகையில் ஆயிரம் ரூபாய்க்கு அறைகள் வாடகைக்கு கிடைக்கும் எந்த பெண்ணை வேண்டுமானாலும் அழைத்து வந்து உல்லாசமாக இருக்கலாம் என ஆங்கிலத்தில் எல்இடி எழுத்துக்கள் ஓடிக் கொண்டிருந்தது.

கடும் அதிர்ச்சி

கடும் அதிர்ச்சி

இதனை கண்ட பொதுமக்கள் பலர் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பெண் ஒருவர் இந்த விளம்பரத்தை கண்டு அதனை புகைப்படம் எடுத்து தமிழக முதல்வர் மற்றும் சென்னை காவல்துறையினரை டாக் செய்து புகார் அளித்திருந்தார். மேலும் சென்னையில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவு சிறிது நேரத்திலேயே சென்னை அளவில் ட்ரெண்டிங் ஆன நிலையில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு சைதாப்பேட்டை சென்னையின் ரெட் லைட் ஏரியாவா என கமெண்ட் செய்தனர்.

போலீசார் எச்சரிக்கை

போலீசார் எச்சரிக்கை

அடுத்தடுத்து பலரும் இந்த படத்தை பகிர்ந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறை கவனத்திற்கும் சென்றது. இதை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தனியார் தங்கும் விடுதியிடம் விசாரணை நடத்தப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் விவகாரம் விஸ்வரூபமானதை அறிந்த விடுதி நிர்வாகம் அந்த விளம்பர பலகையை அகற்றி விட்டதாக கூறப்படும் நிலையில் சென்னையில் இது போன்ற சம்பவம் நடப்பது ஏற்றுக்கொள்ள முடியாது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+