வம்பை விலை கொடுத்து வாங்கி.. என்னை தேடி வந்த பிரச்சினை! கூலி படம் குறித்து ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதன்முறையாக இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்த நிலையில் கூலி படத்தில் பிரீத்தி என்ற தனது கதாபாத்திரம் குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தில், ரஜினிகாந்த் உடன் நடிகர்கள் நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் படத்தில் முதன் முதலாக ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார்.
படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் டீசர், டைட்டில் கார்டு, மற்றும் பாடல்கள் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கூலி திரைப்படம் உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகியுள்ளது.

கூலி படம்
வழக்கமாக ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினிகாந்த் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15 மற்றும் தொடர் விடுமுறையை குறிவைத்து கூலி திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே 100 கோடிக்கும் அதிகமான வசூலை படம் ஈட்டியதாக படக்குழு அறிவித்தது.
கூலி படத்தின் வசூல்
அதற்கு பிறகு தொடர் விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் கூலி படத்தின் வசூல் அதிகரித்து வந்தது. தற்போதைய சூழலில் அந்த படம் ஏறக்குறைய 500 கோடி ரூபாய் வசூலை எட்டி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் இன்னும் ஓரிரு நாட்களில் கூலி திரைப்படம் தாண்டி விடும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள். ஆரம்பத்தில் இந்த படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக இருந்த நிலையில் போகப் போக படத்தின் வசூல் அதிகரித்து தொடங்கியது.
கூலி வெற்றி
இந்த நிலையில் கூலி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தனர் நெட்டிசன்கள். படம் முழுக்க பிரச்சனைகளை தேடி போய் சிக்கிக் கொள்வது போல சுருதிஹாசனின் கதாபாத்திரம் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் சுருதிஹாசனின் இன்ஸ்டாகிராமில் கூலி படத்தில் எப்போதும் நீங்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறீர்கள் உங்களுக்கு அது நியாயம் அற்றதாக தோன்றவில்லையா என கேட்டிருந்தார் ரசிகர் ஒருவர்.
சுருதிஹாசன்
அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன்," ப்ரீத்தி கதாபாத்திரம் துயரத்தில் உள்ளது. அது மற்றொருடைய பார்வை. அதில், நியாயம் அநியாயம் என்று எதுவுமே இல்லை" என பதில் அளித்திருக்கிறார். ஏற்கனவே கூலி படத்தில் தனது கேரக்டர் குறித்து பேசி இருந்த சுருதிஹாசன்," ப்ரீத்தி கேரக்டர் அப்படியே என்னைப் போன்றே இருப்பதில்லை. அந்த கேரக்டரின் சில அம்சங்களுடன் நான் தொடர்பு படுத்திக் கொண்டேன். பெரும்பாலாக அனைத்து பெண்களாலும் இந்த அம்சங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும் அப்படின்னு நான் நினைக்கிறேன். பிரீத்தி கேரக்டரில் எனக்கு மிகவும் அது தான் பிடித்திருந்தது. ப்ரீத்தி ரொம்ப பொறுப்பானவள். மிகவும் கவனமாக இருக்கக் கூடியவள். ஊக்கமளிக்கும் குணம் கொண்டவள்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications