கூட்டுறவு சங்க பயிர்க்கடன் தள்ளுபடி.. விஜய் அரசு தந்த அல்வா! 2024 முதலே கணக்கெடுங்க: சீறிய எஸ்டிபிஐ
சென்னை: விவசாய கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை தவெக அரசு அறிவித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக எஸ்டிபிஐ கட்சி விமர்சித்து உள்ளது. மேலும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி அறிக்கை மூலம் கேட்டு கொண்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் கடந்த 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கி
இந்த திட்டத்தின்படி, குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன்கள் முழுமையாக (100%) தள்ளுபடி செய்யப்படும்; அதற்கு மேல் ரூ.1 லட்சம் வரையிலான கடன்களுக்கு, கடன்தொகையின் அளவுக்கு ஏற்ப ரூ.40,000 முதல் குறைந்தபட்சம் ரூ.5,000 வரை அடுக்கு முறையில் தள்ளுபடி வழங்கப்படும்.
இதே அளவுகளின் அடிப்படையில் சிறு விவசாயிகளுக்கு 50% மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என்றும், உதாரணமாக ரூ.50,000 கடன் பெற்ற சிறு விவசாயிக்கு ரூ.25,000 மட்டுமே தள்ளுபடியாகும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்பதால் மற்ற விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளதோடு, இந்தத் தள்ளுபடி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்பொழுது தமிழகம் முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயிர்க்கடன் தள்ளுபடி
அதேபோல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தவெக அரசுக்கு இதுதொடர்பான கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவுசெய்து வருகிறார்கள்.. அந்தவகையில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்..
அந்த அறிக்கையில், தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது விவசாயிகளைத் தரம் பிரித்து, விகிதாச்சார அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்திருப்பது ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றும் செயலாகும் என்று காட்டமாக கூறப்பட்டு உள்ளது.
ரூ.50 ஆயிரம் வரை கடன்
ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி, அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு விகிதாச்சார முறை என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பைத் தமிழக முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் விவசாயிகளைச் சிறு, குறு, பெரு விவசாயிகள் எனத் தரம் பிரிப்பது அநீதியானது. அனைத்து விவசாயிகளும் ஒரே மாதிரியான உற்பத்திச் செலவைத்தான் எதிர்கொள்கின்றனர். எனவே, நிலத்தின் ஏக்கர் கணக்கில் பிரிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் அடிப்படையில் கணக்கிட்டுத் தள்ளுபடி வழங்க வேண்டும்.
விஜய் அரசு தந்த அல்வா
மேலும், தற்போதைய அறிவிப்பால் 2 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டவர்களும்; கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற தோட்டப் பயிர்களைச் சாகுபடி செய்த விவசாயிகளும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கடன் தள்ளுபடிக்கான கால வரம்பை 2025 மே என்று சுருக்காமல், 2024 ஆம் ஆண்டிலிருந்தே கணக்கிட்டு நீட்டிக்க வேண்டும்.
கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற தவெக-வின் வாக்குறுதியை நம்பி வாக்களித்த விவசாயிகளுக்கு, இந்த அறிவிப்பின் மூலம் தற்போதைய அரசு அல்வா கொடுத்து ஏமாற்றியுள்ளது. இதனால் தவெக அரசுக்கு வாக்களித்த விவசாய பெருங்குடி மக்களும், விவசாய அமைப்புகளும் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
எனவே, தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் தொகையையும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டு கொள்வதாக கூறி இருக்கிறார்.
-
ஸ்ரீதர் வேம்பு ஸ்ட்ரைட்டா உதயநிதி ஸ்டாலின் கிட்டயே கேள்வி.. தர்மத்தின் அர்த்தத்தை சொல்லுங்களேன் -
லீமா ரோஸ் செய்த டீல்? குதிரை வேகத்தில் குதிரை பேரம்? 20 கோடிக்கு 10 அதிமுக எம்எல்ஏ வர்ற போறாங்களாமே -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை.. விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
அண்ணன்னு விஜய் சொன்னாரே? வீர வசனம் முதலமைச்சர் எங்கே? சூலூர் கேஸில் விளாசித் தள்ளிய டிடிவி தினகரன் -
மின்சார வாரியத்தில் சூப்பர் மாற்றம்.. மாறுது டெண்டர்.. தமிழக அரசின் அறிவிப்பால் ஆடிப்போன புரோக்கர்ஸ் -
மொத்த ஃபார்முலாவும் நொறுங்கியது.. "இனி நமக்குள் பிரிவில்லை"! கேசி வீரமணியால் அதிமுகவில் பரபரப்பு -
சேரில் உட்கார்ந்ததுமே பல்டி அடிக்கிறாரா விஜய்? பரந்தூர் மேட்டரில் தமிழக அரசு எடுக்கும் முடிவு என்ன -
இவ்வளவு நாள் ஆண்டவங்களால செய்ய முடியாததை... உடனே விஜய் எப்படி செய்வார்? குஷ்பூ ஓபன் டாக்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications