கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலம் முழுவதுமுள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் முன் எப்போதும் இல்லாத ஒரு விசித்திரமான மற்றும் பரபரப்பான சூழல் அரங்கேறி வருகிறது. அதிகாலை முதலே கூட்டுறவு வங்கிகளின் வாசல்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்களாம்.. தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பாக எப்படியாவது ஒரு கடனை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே எண்ணமாக உள்ளது.. இதற்கு என்ன காரணம்?
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடன்களும், விவசாயக் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற பலமான நம்பிக்கை பாமர மக்களிடையே ஆழமாக பதிந்துள்ளதே இந்த கூட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

கூட்டுறவு மையங்கள்
இப்போது அடகு வைத்தால் பின்னாடி ஒரு ரூபாய் கூட கட்டாமல் நகையைத் திருப்பிக் கொள்ளலாம் என்ற ஒரு கணக்கு சாமானிய மக்களிடம் வேரூன்றி போயுள்ளது. இதன் விளைவாக, கடந்த சில நாட்களாகக் கூட்டுறவு மையங்களில் விண்ணப்பங்கள் மலைபோல் குவிந்து வருவதால், வங்கி ஊழியர்கள் வழக்கமான பணிகளை செய்ய முடியாமல் கூடுதல் பணிச்சுமையால் திணறி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன..
ஆனால், மக்கள் வைத்துள்ள இந்த அதீத நம்பிக்கை நிஜமாகுமா அல்லது பெரும் ஏமாற்றத்தில் முடியுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்.
வணிக வங்கிகள்
இது குறித்து பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் எச்சரிக்கைகள் மிகவும் முக்கியமானவை. கூட்டுறவு வங்கிகள் என்பவை வணிக வங்கிகளைப் போன்ற பெரிய மூலதனம் கொண்டவை கிடையாது என்பதை மக்கள் முதலில் உணர வேண்டும். இவை முழுக்க முழுக்க சுழற்சி முறையிலான பணப் பரிமாற்றத்தை மட்டுமே நம்பி இயங்கக்கூடியவை.
ஒருவர் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே, அந்தப் பணத்தை மற்றுமொருவருக்குக் கடனாக வழங்க முடியும் என்ற எதார்த்தத்தை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசு ஒருவேளை தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, அதற்கான ஈட்டுத்தொகையை வங்கிகளுக்கு வழங்கத் தாமதம் செய்தால், ஒட்டுமொத்த கூட்டுறவு கட்டமைப்பும் சரிந்துவிடும் அபாயமும் உள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்கள்..
அவசர தேவை - பணம்
இது வங்கிகளின் அன்றாட செயல்பாடுகளை முடக்குவதோடு, எதிர்காலத்தில் உண்மையிலேயே அவசரத் தேவைக்காக கடன் கேட்கும் ஏழைகளுக்கு பணம் கிடைக்காத ஒரு இருண்ட சூழலை உருவாக்கிவிடும்.. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் தள்ளுபடி என்பது அத்தனை எளிதான காரியமும் கிடையாது. கடந்த காலங்களில் ஏற்பட்ட முறைகேடுகளை தவிர்க்க, இந்த முறை அரசு மிகக் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவே அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பாக, ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை விவரங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், ஒரு குடும்பத்திற்கு இத்தனை கிராம் தங்கம் மட்டுமே தள்ளுபடி என்ற உச்சவரம்பு கொண்டுவரப்படலாம். ஏற்கனவே தள்ளுபடி பலனைப் பெற்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம்.
முன்னுரிமை யாருக்கு
மேலும், அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்கள் அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் நிலை உருவாகலாம். இத்தகைய சூழலில், வெறும் வதந்திகளையும் எதிர்பார்ப்புகளையும் மட்டுமே நம்பி புதிய கடன்களை சுமை ஏற்றிக்கொள்வது விவேகமானதல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.
ஒருவேளை நீங்கள் வாங்கிய கடன் தள்ளுபடி விதிகளுக்குள் வராமல் போனால், காலப்போக்கில் அதற்கு வட்டி குட்டி போட்டுப் பெரும் சுமையாக மாறிவிடும்.
தள்ளுபடி விதிகள் மாறினால், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் மக்கள் தவிக்க நேரிடும். எனவே, புதிய கடன்களை வாங்குவதற்கு முன்பாக, தற்போதைய கள யதார்த்தத்தையும் வரப்போகும் நிபந்தனைகளையும் மக்கள் தீர ஆலோசிப்பது அவசியம். தேர்தல் காலத்து வாக்குறுதிகள் கவர்ச்சிகரமாக தெரிந்தாலும், அதன் பின்னணியில் உள்ள சிக்கல்கள் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது...!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications